தலை விரித்தாடும் தண்ணீர் பஞ்சம்: மீண்டெழுவது எப்படி? 

குளம் வெட்டுவதும், மரங்கள் நடுவதும் வாழ்வில் தர்மமாகவே வலியுறுத்தப்பட்டது. இதனால் தான், ஒவ்வொரு கோயிலுக்கும் தெப்பகுளம், தல விருட்சம் இருந்தன. காலப் போக்கில் இவை எல்லாம் அழிந்து தண்ணீரைத் தேடி அலையும் அவல நிலை தமிழகத்தில் ஏற்பட்டு இருக்கிறது.
 | 

தலை விரித்தாடும் தண்ணீர் பஞ்சம்: மீண்டெழுவது எப்படி? 

ராஜஸ்தான் மாநிலத்தில், 1977ம் ஆண்டில், காங்கிரஸ் அல்லாத முதல்வராக பைரோன் சிங் செகாவத் பதவி ஏற்றார். அவர், பாலைவனப் பிரதேசங்களை விளைநிலங்களாக மாற்றும் திட்டத்தை அமல்படுத்துவதற்காக அம்மாநில முதன்மை செயலாளருடன் ஆலோசித்தார். அதற்கு, அவர் இதெல்லாம் முடியாது சார் என்றார். 

ஆத்திரம் அடைந்த செகாவத் பல நாடுகளுக்கு சென்று இந்த திட்டத்தை பார்வையிட்டு சொல்கிறேன். அதை அமல்படுத்த முடியுமா முடியாதா என்றெல்லாம் எனக்கு தெரியாது. ஆனால் அமல்படுத்த முடியும் என்று கூறுபவரை முதன்மை செயலாளராக நியமிக்க முடியும் என்றார். 

அப்புறம் என்ன, அருமையான திட்டம் அமல்படுத்தப்பட்டு இன்றைக்கு விவசாயத்தில் சாதனை படைக்கிறார்கள். பாலைவனம் அதிகம் கொண்ட ராஜஸ்தானிலேயே, அந்த நிலையை ஒரு அரசு ஏற்படுத்த முடியும் என்றால் தமிழகத்தின் ஏன் அவ்வாறு நடக்காமல் ‘ஜூரோ டே’ நோக்கி விரைந்து செல்கிறோம்.

புதுக்கோட்டையை ஆண்டமன்னர்கள், புதுக்குளம், ஐயனார்குளம், பல்லவன் குளம் என்று வாய்ப்பு கிடைத்த பகுதிகளில் எல்லாம் குளங்கள் அமைத்து, அதற்கு நீர் வழிப்பாதைகளையும் ஏற்படுத்தி இருந்தார்கள். இதனால் நீர் நிலைகளில் மட்டும் அல்லாமல் ஊர் உள்ளேயும் வீடுகளிலும் கிணற்றில் நீர் நிறைந்து இருந்தது. 

தலை விரித்தாடும் தண்ணீர் பஞ்சம்: மீண்டெழுவது எப்படி? 

குளம் வெட்டுவதும், மரங்கள் நடுவதும் வாழ்வில் தர்மமாகவே வலியுறுத்தப்பட்டது. இதனால் தான், ஒவ்வொரு கோயிலுக்கும் தெப்பகுளம், தல விருட்சம் இருந்தன. காலப் போக்கில் இவை எல்லாம் அழிந்து தண்ணீரைத் தேடி அலையும் அவல நிலை தமிழகத்தில் ஏற்பட்டு இருக்கிறது.

நீர்நிலை ஆக்கிரமிப்பு என்பது, சர்வசாரணமாக மாறிவிட்டது. தண்ணீர் வரும் வழியை அடைத்து விட்டால் நீர் நிலை வற்றிவிடும். அந்த நீர்நிலை ஒரு சில ஆண்டுகள் ஊரின் பொதுகுப்பை தொட்டியாக உருவெடுத்து, அதன் பின்னர் வீடாக,அலுவலகமாக மாறிவிடும். ஆக்கிரமிப்பாளர்களை தண்டிக்க வேண்டிய அரசே, நீர் நிலைகளை ஆக்கிரமித்து தான் அலுவலகங்கள் கட்டப்படுகின்றன. நீர் பராமரிப்பு ஆட்சி செய்பவர்களுக்கும், ஆளப்படுகிறவர்களுக்கும் இல்லை.

இதற்கு இயற்கை தரும் பலத்த அடிதான் தற்போது சென்னையில் நடப்பது. தண்ணீர் இல்லை என்பதால் ஓட்டல்களி்ல கூட மதிய சாப்பாடு நிறுத்தப்பட்டுவிட்டது. இனியேனும் விழிக்காவிட்டால் இந்த கொடுமை நிரந்தரமாக தமிழகத்தின் அனைத்து ஊர்களுக்கும் பரவும் அபாயம் உள்ளது.

வியாதியின் அறிகுறியை சென்னை காட்டி விட்டது. மற்ற ஊர்கள் இதைக் கண்டு விழித்துக் கொள்ளுமா என்பது கேள்விக்குறிதான்.

அரசும் கூட நேரடியாக நீர்நிலைகளை துார்வாறுவது, மரங்களை நட்டு பராமரிப்பது என்று செய்யலாம் தான். ஆனால் இதில் ஆகும் செலவை விட கிடைக்கும் பலன் மிகவும் குறைவாகவே இருந்தது. தனியார் தொண்டு நிறுவனங்களுக்கு இந்த பணியை மடைமாற்றினால், செலவு குறைந்தாலும், எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை. 

தலை விரித்தாடும் தண்ணீர் பஞ்சம்: மீண்டெழுவது எப்படி? 

இந்த சூழ்நிலையில் தான் இது போன்ற பணிகளை ஊராட்சி ஒன்றியங்கள் மூலம் செய்யப்பட்டன. அதில் பொறுப்பு வகிப்பவர் உள்ளூர்காராகவே இருப்பார், அவர். வெளியூர் அதிகாரிகள், தொண்டு நிறுவனங்களை விட சிறப்பாக செயல்படுவார் என்று எண்ணி மத்திய அரசு ஊராட்சிகளை நேரடியாக தொர்பு கொண்டு இந்த திட்டங்களை நிறைவேற்றுகிறது. 

இவர்களோ மற்ற எல்லோரையும் விட அதிக ஊழல் வாதிகளாக இருக்கிறார்கள். அதன் காரணமாகத்தான் நுாறு நாள் வேலைத் திட்டம் முற்றிலும் தோல்வியை தழுவியது. மக்களுக்கு வேலை செய்யாமல் கூலி வாங்கும் திட்டமாக இது மாறிவிட்டது. திட்டம் தொடங்கிய காலத்தில் செய்யும் வேலையின் அளவுக்கு ஏற்ற கூலி என்பது பின்னாளில் அமல்படுத்தப்படவில்லை. இதன் காரணமாக மரத்தடி நிழலில் துாங்கிவிட்டு கமிஷன் போக கூலி வாங்கினார்கள். 

விளைவு கணக்குப்படி உள்ளூர் நீர்நிலைகள் துார்வாரப்பட்டன. ஆனால் யதார்த்தம் அவ்வாறு இல்லாததால் மழைநீரை சேமிக்க முடியவில்லை. உச்சகட்ட வறட்சி தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் சிக்கி கொண்டது. இதற்கு ஆட்சியாளர்கள் காரணம் அல்ல, அரசு தானே ஏமாறுகிறது என்று எண்ணி தங்களை தாங்களே ஏமாற்றிக் கொண்ட மக்கள் தான் காரணம்.

இந்நிலையில் குடிமைப் பணிகளுக்காக மீண்டும் 499 கோடி ரூபாய்களை அரசு ஒதுக்கி போர்க்கால அடிப்படையில் பணிகளை தொடங்கப் போவதாக அறிவித்துள்ளது. இதையாவது முறையாக பணிகள் செய்ய பயன்படுத்த வேண்டும். அந்த பணிகளை கண்காணிப்பது கிராமத்தில் உள்ள ஒவ்வொருவரின் கடமை. 

சுய நலம் அதை தடுத்தால் சோமாலியாவில் மக்கள் பசியால் தவித்து செத்தது போல தமிழகத்தில் தாகத்திற்கு சாவுகள் எண்ணிக்கை அதிகரிக்கும். தற்போதே சென்னையில் ஹோட்டல்களில் மதிய உணவு நிறுத்தப்பட்டு விட்டது. நிறுவனங்கள் வீட்டில் இருந்தே வேலை பாரக்க சொல்கின்றன. பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவை அனைத்துமே டைனோசர் வாலில் பற்றிய தீ, அது மூளையை எட்டி தீயை உடனே அணைக்க வேண்டும். அதை விட்டுவிட்டால் இனத்தின் அழிவை தடுக்க எவனாலும் முடியாது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP