தமிழகத்தின் மிகப்பெரிய தெப்பக்குளம்... வண்டியூர் மாரியம்மன் தெப்பகுளம்..!

மதுரை மாவட்டத்தில் உள்ள வண்டியூர் மாரியம்மன் திருக்கோயில் தெப்பக்குளம் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இந்த தெப்ப குளத்தை வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளம் என்று அழைக்கப்படுகிறது. இந்த தெப்பக்குளம் 304.08 மீட்டர் நீள அகலம் கொண்டது.
 | 

தமிழகத்தின் மிகப்பெரிய தெப்பக்குளம்... வண்டியூர் மாரியம்மன் தெப்பகுளம்..!

மதுரை மாவட்டத்தில் உள்ள வண்டியூர் மாரியம்மன் திருக்கோயில் தெப்பக்குளம் மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.  இந்த தெப்ப குளத்தை வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளம் என்று அழைக்கப்படுகிறது. 
தமிழகத்தின் மிகப்பெரிய தெப்பக்குளம்... வண்டியூர் மாரியம்மன் தெப்பகுளம்..!
இந்த தெப்பக்குளம் 304.08 மீட்டர் நீள அகலமும், தெப்பக்குளத்தின் நான்கு புறமும் 12 நீளமானப் படிக்கட்டுகளும்  உள்ளது. இங்கு சுமார் 15 அடி உயரத்துக்கு கல்லினால் ஆன சுவரும் கட்டப்பட்டிருக்கிறது. இதன் நடுவில் உள்ள நீராழி மண்டபத்தில் விநாயகர் கோவில் ஒன்றுள்ளது. சுரங்கக் குழாய்களின் மூலமாக வைகை நதி நீர் தெப்பத்திற்குள் வருமாறு இணைப்பு உள்ளதாக வரலாறு கூறுகிறது. 
தமிழகத்தின் மிகப்பெரிய தெப்பக்குளம்... வண்டியூர் மாரியம்மன் தெப்பகுளம்..!
இது தமிழ்நாட்டிலுள்ள பெரிய தெப்பக்குளமாகும் என்று சொல்லப்படுகிறது. மீனாட்சி அம்மன் கோவில் கட்டிய போது மன்னர் திருமலை நாயக்கர் கோவில் கட்ட மண் வேண்டி மதுரை நகருக்கு வெளியில் அமைந்துள்ள வண்டியூர் என்ற இடத்தில் ஒரு பெரிய  தெப்பக்குளத்தை  வெட்டியதாகவும், அந்த சமயம் அவர் குளத்தில் ஒரு முக்குறுணிப் பிள்ளையாரைக் கண்டெடுத்ததாகவும் கூறப்படுகிறது. இறுதியில் முக்குறுணிப் பிள்ளையாரை, கோவிலிலேயே தனி சன்னதி அமைத்து நிறுவியுள்ளார். 
தமிழகத்தின் மிகப்பெரிய தெப்பக்குளம்... வண்டியூர் மாரியம்மன் தெப்பகுளம்..!
முக்குறுணி பிள்ளையாரை வைத்து மீனாட்சி அம்மன் கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா விமர்சையாகக் கொண்டாடப்படுகிறது. இந்த நிகழ்வின்போது இந்த முக்குறுணிப் பிள்ளையாருக்கு மிகப் பெரிய ஒற்றைக் கொழுக்கட்டையைப்  படைக்கின்றனர். இந்தக் கொழுக்கட்டை செய்வதற்கு மூன்று குறுணி அரிசி பயன்படுத்தப்படுகிறதாம். பிள்ளையாருக்கு படைக்கப்பட்ட பின் கொழுக்கட்டை பிரசாதமாக பக்தர்களுக்கு வழங்கப் படுகிறது. மூன்று குறுணி அரிசியை மாவாக இடித்து, அதில் ஒரே கொழுக்கட்டையாகச் செய்து, விநாயக சதுர்த்திக்குப் படைப்பதால் இந்தப் பிள்ளையாரை 'முக்குறுணிப் பிள்ளையார்' என்கின்றனர்.  

மதுரை நகருக்கு வெளியில் அமைந்துள்ள வண்டியூர் என்ற இடத்தில் மணல் தோண்டியதால் பள்ளமாக இருந்த அப்பகுதியை சீரமைக்க எண்ணிய மன்னன் அப்பகுதியை சதுர வடிவில் வெட்டி, 1645ல் தெப்பக்குளமாக மாற்றி அதன் நடுவே வசந்த மண்டபம் ஒன்றினையும் கட்டியதாக வரலாறு கூறுகின்றன. வைகை ஆற்றின் வண்டியூர் மேல்மடைக்கு நேரில் இருப்பதால் வண்டியூர் மாரியம்மன் கோயில் என்றும் அழைக்கப்படும் இந்தக் கோயிலில், மகிஷனை வதம் செய்வது போன்ற நிலையில் காட்சி தருகிறாள் அம்மன்.  அந்த வகையில் மாரியம்மனே மகிஷாசுரமர்த்தினியாகவும் திகழ்கிறாள் என்பதும் தனிச்சிறப்பு. மேலும் இடது காலின் மீது வலது காலைப் போட்டபடி இந்த அம்பிகை அமர்ந்திருப்பது அபூர்வ திருக்கோலம். 
தமிழகத்தின் மிகப்பெரிய தெப்பக்குளம்... வண்டியூர் மாரியம்மன் தெப்பகுளம்..!
இங்கு தைப்பூசத்தன்று தெப்பத்திருவிழாவும், பங்குனி மாதத்தில் பத்து நாள் பிரமோத்சவத் திருநாளும், பூச்சொரிதல் திருவிழாவும், இக்கோயிலின் முக்கியத் திருவிழாக்களாக உள்ளது. தெப்பத்திருவிழாவின் போது மீனாட்சியம்மனுக்கும்,சுந்தரேஷ்வரருக்கும் தெப்பத்திருவிழா எடுக்கப்படுகிறது. 
தமிழகத்தின் மிகப்பெரிய தெப்பக்குளம்... வண்டியூர் மாரியம்மன் தெப்பகுளம்..!
அம்மனை இங்குள்ள தெப்பத்தின் நடுவே உள்ள வசந்த மண்டபத்திற்கு கொண்டுவரப்பட்டு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்படுகின்றன. அப்போது வண்ணமயமான இந்தத் தெப்பத்திருவிழாவைக் காண ஏராளமான மக்கள் மதுரை வருவார்கள். அன்று முழுவதும் மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோவில் நடை அடைக்கப்பட்டிருக்கும். மதுரைக்கு வரும் சுற்றுலாப்பயணிகள் இந்த வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளத்தை பார்க்காமல் திரும்புவதில்லை.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP