செங்குத்தான மலையில்... வரதராஜ பெருமாள் கோவில்...!

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் பகுதிக்கு அருகில் உள்ளது நைனாமலை வரதராஜ பெருமாள் கோவில். செங்குத்தான மலை மீது அமையபெற்றுள்ளதால் இப்பகுதி புகழ் பெற்றதாக கருதப்படுகிறது.
 | 

செங்குத்தான மலையில்... வரதராஜ பெருமாள் கோவில்...!

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் பகுதிக்கு அருகில் உள்ளது நைனாமலை வரதராஜ பெருமாள் கோவில். செங்குத்தான மலை மீது அமையபெற்றுள்ளதால் இப்பகுதி புகழ் பெற்றதாக கருதப்படுகிறது. இக்கோவிலை பார்ப்பதற்கு சாய்வாகத் தோன்றும் இம்மலையின் உயரம் 3 கிலோ மீட்டர். ஆனால் மிகவும் செங்குத்தான, குறைந்த அகலமே கொண்ட 3,700 படிகள் உள்ளன.

செங்குத்தான மலையில்... வரதராஜ பெருமாள் கோவில்...!

மற்றொரு சிறப்பம்சமாக மலையின் முகட்டில், உச்சி முழுவதையும் உள்ளடக்கி, கோவில் கட்டப்பட்டுள்ளது. மலை மீது திருத்தலம் நான்கு யுகமாகக் கொண்டு இந்திரஜாலம், பத்மஜாலம், யாதவா ஜாலம், நைனா ஜாலம் ஆகிய பெயர்களுடன் திகழ்கின்றது. வரதராஜப் பெருமாள் குவலயவல்லியுடன் காட்சியளிக்கிறார்.

செங்குத்தான மலையில்... வரதராஜ பெருமாள் கோவில்...!

பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே கட்டப்பட்டுள்ள இக்கோவிலில் ஆனி முதல் தேதியில் சூரிய உதயத்தின்போது சூரிய ஒளி சுவாமி மீது விழுவது விசேஷம்.  2,600 அடி உயரத்தில் அமைந்துள்ள இந்த கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் கடவுளின் அருளால் பயம் இல்லாமல் செல்வதாக கூறுகின்றனர். வரலாற்று சிறப்பு மிக்க இக்கோவில், பல்லவர் மன்னரால் கட்டப்பட்டதாக வரலாறு கூறுகிறது. மேலும், கோவிலின் சில பகுதிகள், திருமலை நாயக்கரின் தம்பி ராமச்சந்திர நாயக்கர் கட்டியதற்கான சான்றுகள் உள்ளன.

அடிவாரத்தில் இருந்து மலைப்பாதை வழியாக, 3,360 படிகளை கடந்து சென்றால் மட்டுமே, நின்ற நிலையில் வீற்றிருக்கும் குவலயவல்லி தாயார் சமேத வரதராஜ பெருமாளை தரிசிக்க முடியும்.  மலைப்பாதையில் வற்றாத ஊற்றுகளான பெரிய ஆழியும் உள்ளது. மலை உச்சியில் உள்ள, 120 அடி உயரம் கொண்ட ஒரே பாறை மீது, இக்கோவில் கட்டப்பட்டுள்ளது. 

செங்குத்தான மலையில்... வரதராஜ பெருமாள் கோவில்...!

இக்கோவிலில், ஆண்டு தோறும் புரட்டாசி உற்சவ திருவிழா, வெகுவிமர்சையாக கொண்டாப்படுகிறது. லட்சக்கணக்கில் பக்தர்கள் வரும் நைனாமலை உச்சிக்கு வாகனங்கள் சென்றுவர, அறநிலையத்துறை சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில், மூன்று கொண்டை ஊசி வளைவு மற்றும் இரண்டு சாதாரண வளைவுகள் கொண்டு பாதை அமைக்கப்பட்டுள்ளது.

இப்படி பல சிறப்புகளை உடைய நைனார் மலைக்கு, நைனார் என்று பெயர் வர காரணம் என்னவென்று தெரிந்துகொள்ள வேண்டுமா?…வாருங்கள்..

நைனா என்றால் தந்தை என்று பொருள். நாமக்கல் மாவட்டத்தில் பெரும்பாலும் தெலுங்கு மொழி பேசுபவர்கள் அதிகம் இருப்பதாலும், நாயக்கர்கள் இப்பகுதியை ஆண்டு வந்ததாலும், என்னவோ நைனா என்ற பெயர் வந்துள்ளது.  கடவுளை தந்தை என்று கூறும் வழக்கம் இருப்பதால் இம்மலையை நைனா மலை என்று அழைக்கிறார்கள். சிவ தலங்களைப் போல தொன்மை வாய்ந்த இம்மலையில் ரிஷிகள் தவமிருந்து, வரதராஜப் பெருமாளை தரிசித்து வந்ததாகவும், கன்மலையின் மகரிஷி என்பவர் பெருமாளுக்கு கைங்காரியங்கள் செய்து, மலை மீதே சமாதி ஆனதாலும், இம்மலைக்கு நைனாமலை என்று பெயர் வந்ததாகவும் வரலாற்றில் கூறப்பட்டுள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP