எண்ணிக்கை குறையும் நல்லவர்கள்...!

மக்களுக்கு நல்லது செய்வதில் முதலிடத்தில் இருப்பது அரசியல். அதைத் தாண்டி ஒவ்வொரு ஊரிலும், வட்டாரத்திலும் மக்களுக்கு நல்லது செய்பவர்கள் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறனர். அவர்களை எந்த சக்தியாலும் அசைக்க முடியாது.
 | 

எண்ணிக்கை குறையும் நல்லவர்கள்...!

மக்களுக்கு நல்லது செய்வதில் முதலிடத்தில் இருப்பது அரசியல். அதைத் தாண்டி ஒவ்வொரு ஊரிலும், வட்டாரத்திலும் மக்களுக்கு நல்லது செய்பவர்கள் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறனர். அவர்களை எந்த சக்தியாலும் அசைக்க முடியாது. 

அதே நேரத்தில் நாட்டின் முதன்மை தொழிலாக விவசாயம் சார்ந்து இருக்கும் போது ஒவ்வொரு பகுதியிலும் ஒரு சில குடும்பங்கள் தான் நல்லது கெட்டது என்று அனைத்திலும் தலையிடுவார்கள். ஜமீன்தார்கள், மிராசுதார்கள், மிட்டாக்கள் என்று அவர்களுக்கு பெயர். காலப்போக்கில் இவை அனைத்துமே கெட்ட வார்த்தைகளாக மாறிவிட்டது. இதற்கு முக்கிய காரணம் கல்வி. கற்றவர்கள் எந்த ஜாதியாக இருந்தாலும் மீண்டும் விவசாயத்திற்கு வராதது தான் முக்கிய காரணம். 

தொடக்க காலத்தில் இது போன்ற குடும்பங்களையும், அவர்களை நம்பி வாழ்ந்தவர்களையும் 2 அரசியல்கட்சிகள் தன்னதாகிக் கொண்டன. அவை காங்கிரஸ், மற்றும் இடதுசாரிகள். சுதந்திர போராட்டத்துடன் நேரடியாக தொர்பு கொண்ட சாதாரண மக்களை தவிர்த்து காங்கிரஸ் கட்சியில் இருந்தவர்களில் பணக்காரர்கள் அதிகம். இடதுசாரிகளில் கொள்கை பிடித்து கட்சியில் இருந்தவர்களை தவிர்த்து பெரும்பாலானவர்கள் தொழிலாளர்கள், குறிப்பாக விவசாயக் கூலித் தொழிலாளர்கள் அதிகம். 

இவர்கள் விட்டு சென்றவர்களை தான் திராவிட கட்சிகள் தங்கள் பங்கிற்கு வளைத்துக் கொண்டார்கள்.

இந்த காரணத்தால் தான் குறிப்பிட்ட சிலர் கட்சிகளை தாண்டியும் தேர்தல்களில் வெற்றி பெற முடிந்தது. கடந்த 1952ம் ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலில் 533 பேர் சுயேச்சை வேட்பாளர்களாக போட்டியிட்டு 37 பேர் வெற்றி பெற்றனர். காங்கிரஸ் கட்சியின் அபரிமிதமான செல்வாக்கு, எதிர்கட்சியாக இடதுகம்யூனி்ட் கட்சி இன்னும் சில கட்சிகளின் செல்வாக்கையும் மீறி இந்த 37 பேர் வெற்றி பெற்று இருக்கிறார்கள்.பதிவான ஓட்டுகளில் 15.9 சதவீதம் சுயேச்சைகள் பெற்றது.  44.99 சதவீதம் ஓட்டுகள் பெற்று காங்கிரஸ் முதலிடத்திலும் சுயேச்சைகள் 2ம் இடத்திலும் இருந்தனர். 

இதற்கு அடுத்து நடந்த தேர்தலில் 481 பேர் போட்டியிட்டு 42 பேர் வெற்றி பெற்றனர். இவர்கள் பெற்ற ஓட்டு சதவீதம் 19.41. இது தான் இன்றளவும் முறியடிக்க முடியாத சாதனையாக உள்ளது.  அதே நேரத்தில் போட்டியிடும் சுயேட்சைகளின் எண்ணிக்கை 533 என்பதில் இருந்து கடந்த தேர்தலில் 3,234 என உயர்தது. கடந்த தேர்தல்களில் வெற்றி பெற்றவர்கள் எண்ணிக்கை வெறும் 3 தான். 

போட்டியிடுபவர்கள் எண்ணிக்கை உயர்வுக்கு கட்சிகளே போலி வேட்பாளர்களை நிறுத்தியதும், திடீர் பிரபலமாக வேண்டும் என்று நினைத்தவர்களும் அதிகரித்தது தான் காரணம். இதனால் தான் கிட்டத்தட்ட 6.9 சதவீதமாக இருந்த சுயேச்சைகளின் வெற்றி கடந்த தேர்தலில் 0.09 சதவீதமாக குறைந்தது. 

இந்த எண்ணிக்கை உயரும் போது தான் நாடு நலமாக இருக்கும். அரசியல் கட்சிகள் கைவிட்டாலும், இவர்கள் நம்மை காப்பாற்றுவார்கள் என்ற எண்ணம் கொண்டவர்கள் வாழ்ந்தால் தான் இந்த எண்ணிக்கை அதிகரிக்கும். 

தமிழகத்தை பொறுத்தளவில் இது போல வாழ்ந்து மறைந்தவர் என தாமரைக்கனியை குறிப்பிடலாம். அவருக்கு தான் ஓட்டே தவிர அவர் எந்த சின்னத்திலும் வெற்றி பெறும் வகையில் சட்டசபைத் தொகுதியில் மக்களுடன் நெருக்கமாக பழகி இருந்தார். 

அதே போலதான் அறந்தாங்கி திருநாவுக்கரசர் என்று அழைக்கப்படும் திருநாவுக்கரசரும். தொகுதியில் உள்ள அனைத்து நல்லது கெட்டதற்கும் சென்று தன்னை அறந்தாங்கி தொகுதியுடன் பின்னி பிணைத்துக் கொண்டார். ஆனால் அந்த தொகுதியிலும் இவரது ஆதரவாளர்கள் நிற்கும் போது தோல்வி அடைந்தார்கள். அதற்கு இவர் சந்தித்த அரசியல் உள்குத்துக்கள் தான் காரணமே தவிர்த்து, இவர் காரணம் இல்லை. 

அதே போலவே தஞ்சை தொகுதியில் பூண்டி வாண்டையார் குடும்பமும் இப்படித்தான். கடந்த சில தேர்தலுக்கு முன்பு இவர்கள் குடும்பத்தில் இருந்து போட்டியிட்ட போது, எதிர்கட்சிகள் தாங்கள் கட்சி கட்டுப்பாட்டை கருதிதான் போட்டியிடுகிறோமே தவிர்த்து வாண்டையாரை எதிர்த்து போட்டியிட வில்லை என்று வெளிப்படையாகவே பிரச்சாரம் செய்தார்கள்

இது போன்றவர்கள் எண்ணிக்கையில் அதிகரிப்பதும், அவர்களை அரசியல் கட்சிகளை கடந்து மக்கள் ஆதரிப்பதுதான் ஜனநாயகத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கும். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP