பயங்கரவாதிகள் பூமியாக மாறும் தமிழகம்

கடல் மார்க்கத்தில் தீவிரவாதிகள் ஊடுறுவல் செய்யாமல் இருக்க எல்லைப் பாதுகாப்பு படை உட்பட பல்வேறு அமைப்புகள் உள்ளன. அவற்றின் கடைசி புகலிடம் மீனவர்கள் தான். அவர்கள் தகவல் கொடுத்தால் மட்டுமே மற்றவர்களுக்கு தெரியும். அவர்கள் ஏதாவது படகு வந்துள்ளது. புதியவர்கள் நடமாட்டம் உள்ளது என்று மீனவர்கள் கூறியபின்னர் நம்மவர்கள் சென்று பிடித்து பிலிம் காட்டுவார்கள்.
 | 

பயங்கரவாதிகள் பூமியாக மாறும் தமிழகம்


தமிழகம் எப்போதும் அமைதிபூங்கா என்று ஆளும் கட்சி எப்போதும் கூறிவருகிறது. ஆனால் தாழம்பூவில் மறைந்து இருக்கும் பாம்பு போல, அமைதிப் பூங்காவான தமிழகத்தில் பயங்கரவாதிகள் மறைந்து வாழ்கிறார்கள். கடவுள் கருணையால் மறைந்து இருக்கும் தீவிரவாதிகள் வெளிப்பட்டுக் கொண்டே இருக்கிறார்கள். 

இங்கு புலனாய்வு அமைப்புகளை விட, அவ்வப்போது நடக்கும் சம்பவங்கள்  தான் தீவிரவாதிகள், அவர்கள் ஆயுதங்கள் சிக்குவதால் தான்  கடவுள் கருணை என்று கூறப்படுகிறது.

1998ம் ஆண்டு கோவையில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள அத்வானி வருகை தர திட்டமிடப்பட்டது. அவரை குறிவைத்து கோவையின் பல இடங்களில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டிருந்தன. அவற்றில் பெரும்பாலானவை குறிப்பிட்ட நேரத்தில் வெடித்து சிதறும் வகையில் வைக்கப்பட்டிருந்தன. 

ஆனால் அத்வானி சென்னையில் பேட்டி அளித்த போது காலதாமதம் ஏற்படவே, திட்டமிடப்பட்ட ரீதியில் கோவையில் குண்டுகள் வெடித்து சிதறின. அதில் இந்து, முஸ்லீம், கிறிஸ்தவர்கள் என்ற வேறுபாடு இல்லாமல் 58 பேர் இறந்தனர்.

இதைத் தொடர்ந்து போலீசார் கோவையில் அதிரடி சோதனை நடத்தி குவியல் குவியலாக ஆயுதங்களைக் கைப்பற்றினர். ஏட்டு செல்வராஜ் படுகொலையிலும் அதே நிலைதான். அதன்பின்னர் ஒவ்வொரு சம்பவம் நடக்கும் போது ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

இதில் குறிப்பிட்ட மதத்தை சேர்ந்தவர்கள் ஆதரவுடன் ஆயுதங்கள் குவிக்கப்படுவது தான் யோசிக்க வைக்கிறது.

கடல் மார்க்கத்தில் தீவிரவாதிகள் ஊடுறுவல் செய்யாமல் இருக்க எல்லைப் பாதுகாப்பு படை உட்பட பல்வேறு அமைப்புகள் உள்ளன. அவற்றின் கடைசி புகலிடம் மீனவர்கள் தான். அவர்கள் தகவல் கொடுத்தால் மட்டுமே மற்றவர்களுக்கு தெரியும். அவர்கள் ஏதாவது படகு வந்துள்ளது. புதியவர்கள் நடமாட்டம் உள்ளது என்று மீனவர்கள் கூறியபின்னர் நம்மவர்கள் சென்று பிடித்து பிலிம் காட்டுவார்கள்.

இதே நிலைதான் உள்ளூர் பயங்கவாதிகளுக்கும், சாலை ஓரங்களில் வழிபாட்டு தலங்கள், பின்னர் ஊர் உள்ளே குறிப்பிட்ட இனத்தவர்கள் வசதிக்கும் பகுதிகளில் சென்று பதுங்கி கொள்வது. அந்த பகுதிகளில் மாற்று மதத்தவர்கள் தலைவைத்து கூட படுக்கமாட்டார்கள். காவல்துறையினர் செல்வதற்கு கூட ஓட்டு அரசியலுக்கு பயந்த ஆட்சியாளர்கள் அனுமதிப்பதில்லை. இதனால் யார் வருகிறார்கள், யார் செல்கிறார்கள் என்பது தெரியாது.  இப்படித்தான் ஆயுத்தங்கள் பதுக்கப்படுகின்றன.

தமிழகத்தின் ஏதோ ஒரு மூலையில் இருந்தவர் இலங்கை சர்ச் குண்டு வெடிப்பிற்கு மூளையாக செயல்பட்டு இருக்கிறார்கள் என்றால், மக்கள் அவர்களை எந்த அளவிற்கு மறைத்து பாதுகாத்திருக்கிறார்கள் என்பது நன்கு விளங்கும்.

இப்போதும்  கூட என்ஐஏ அமைப்பு நாடுமுழுவதும் பலரை குறிப்பாக தமிழகத்தை சேர்ந்தவர்களை கைது செய்துள்ளது. இவர்கள் இந்த அளவிற்கு பதுங்கி வாழ்வதற்கு மக்கள் உதவி செய்து இருக்கிறார்கள் என்பது தான் அபாயத்தின் உச்சகட்டம்.

இத்தனைக்கும் இந்துக்கள் போல அல்லாமல் கிறிஸ்தவம், இஸ்லாம் போன்ற மதங்கள் கட்டுப்பாடு கொண்டவவை. அங்கு சர்ச், ஜமாத்திற்கு தெரியாமல் ஒரு அணுவும் அசையக் கூட முடியாது. அப்படிப்பட்டவர்களில் சிலர், பயங்கரவாதிகளுக்கு புகலிடம் கொடுக்கிறார்கள் என்பது தான் வேதனைக்குரிய விஷயம்.

பயங்கரவாதிகளுக்கு மதம் கிடையாது என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். அப்படி இருந்தால் இஸ்லாமிய, கிறிஸ்தவ நாடுகளில் போரே நடக்காது. ஆனால், அந்த நாடுகளிலும் போர் நடக்கிறது. அதிலும் இஸ்லாமியர்கள், ஷியா, சன்னி என்று போராடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். இதில் யாரை காபீரகள் என்று கூற முடியும்.   30 ஆண்டுகள் போர் என்று வரலாற்றில் குறிப்பிடப்படும் போர் புனித ரோமானிய பேரரசில் கத்லோதிக்க கிறிஸ்தவர்களுக்கும், சீர்திருத்த திருச்சபைக்கும் நடந்தது. 

பிரான்ஸ் மதப் போர்களும் இவர்கள் இடையே நடந்தது தான். கடந்த 2005ம் ஆண்டில் நடந்த இரண்டாம் சூடான் மக்கள் போரும் கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள்  இடையே நடந்தது. இலங்கை சர்ச்சில் நடந்த குண்டு .வெடிப்பும் கூட இந்த இரு மதங்களிடயே நடந்தது. தான். தற்போது கூட உலகின் பல இடங்களில் நடக்கும் மோதல்களுக்கு அயோத்தியில் மசூதி இடித்ததோ,மோடி அரசோ, ஆர்எஸ்எஸ் அமைப்போ காரணம் இல்லை என்கிற போது எதனால் போராட்டம் நடக்கிறது.

யாரோ எவரோ அடித்து கொண்டு செத்தால் பரவாயில்லை. நம் வீட்டு பிள்ளைகள், குடும்பத்தை காப்பாற்றுவான் என்று கற்பனை செய்து வைத்த வாலிபர் மதத்தின் பெயரால் சொர்க்கம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தன் வாழ்க்கையும், குடும்பத்தினர் வாழ்க்கையும் நரகமாக மாற்றி விடுகின்றனர்.

இது போல எந்த வகையில் பார்த்தாலும், பயங்கரவாதிகள் அடையாளம் கண்டு அழிக்கப்பட வேண்டும். இறைவன் தான் காப்பாற்றுவானே தவிர்த்து, இடையில் இந்த பயங்கரவாதிகள் காப்பாற்ற மாட்டார்கள். இதை நன்றாக உணர்ந்து அனைவரும் ஒத்துழைப்பு தந்தால் தான் தமிழகம் அமைதி பூங்காவாக இருக்கும். அதைவிடுத்து பயங்கரவாதிகளை அனுமதித்தால் தமிழகம் அமைதியான கல்லறை பூங்காவாகத்தான் இருக்கும்.

newstm.in

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP