தமிழகம் எனக்கு...டெல்லி உனக்கு... உச்சகட்டத்தில் வாரிசு அரசியல்!

அகில இந்திய அளவில் குடும்ப அரசியல் என்றாலே முதலில் நினைவுக்கு வருவது, நேரு குடும்பம் தான். மகாத்மா காந்தியின் எவ்வித நேரடி தொடர்பும் இல்லாமல், தங்கள் பெயர்களுக்குப் பின்னால், காந்தி என்ற பெயரை சொருகிக் கொண்டு, தியாகப் பரம்பரையாய் காட்டிக் கொள்பவர்கள் அவர்கள்.
 | 

தமிழகம் எனக்கு...டெல்லி உனக்கு... உச்சகட்டத்தில் வாரிசு அரசியல்!

அகில இந்திய அளவில் குடும்ப அரசியல் என்றாலே முதலில் நினைவுக்கு வருவது, நேரு குடும்பம் தான். மகாத்மா காந்தியின் எவ்வித நேரடி தொடர்பும் இல்லாமல், தங்கள் பெயர்களுக்குப் பின்னால், காந்தி என்ற பெயரை சொருகிக் கொண்டு, தியாகப் பரம்பரையாய் காட்டிக் கொள்பவர்கள் அவர்கள். 

அதே பாேல், தமிழகத்தில் ‛தமிழின தலைவர்’ என திமுக.,வினரால் அன்போடு அழைக்கப்படும் திருவாளர் கருணாநிதியின் குடும்பம், வாரிசு அரசியலில் புகழ் பெற்றது. இதை, மறைந்த முதல்வர் ஜெயலலிதா, ஒரு பொதுக்கூட்டத்திலேயே போட்டுடைத்தார். 

தமிழகம் எனக்கு...டெல்லி உனக்கு... உச்சகட்டத்தில் வாரிசு அரசியல்!தமிழகம் எனக்கு...டெல்லி உனக்கு... உச்சகட்டத்தில் வாரிசு அரசியல்!

அப்போது பேசிய அவர், ‛தந்தை முதலமைச்சர், மகன் துணை முதல்வர், மகளோ நாடாளுமன்ற உறுப்பினர், பேரன் மத்திய அமைச்சர், மகளின் மனம் கவர்ந்தவரோ மற்றொரு மத்திய அமைச்சர். இப்படி ஒரு குடும்ப அரசியலை, உலகின் வேறெந்த பகுதியிலாவது காண முடியுமா?’ என கேள்வி எழுப்பினார்.

திமுக., மற்றும் காங்கிரசில் தான் இந்த நிலை என்பது மாறி,  இன்று அரசியலில் இருக்கும் அனைத்து தலைவர்களுமே, தங்கள் குடும்பம் மாெத்தத்தையும் அரசியலில் நுழைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அதில் அதிதீவிரமாக செயலாற்றவும் துவங்கியுள்ளனர். 

தமிழகம் எனக்கு...டெல்லி உனக்கு... உச்சகட்டத்தில் வாரிசு அரசியல்!

அதிமுக.,வை சேர்ந்த, துணை முதல்வர் பன்னீர் செல்வம் தன் மகனை, லோக்சபா தேர்தலில் களம் இறக்க திட்டமிட்டுள்ளார். அதற்காக, கட்சியில் விருப்ப மனுவும் தாக்கல் செய்துள்ளார். இது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, ‛அரசியலுக்கு வர அனைவருக்கும் உரிமை உண்டு; அந்த வகையில், கட்சியின் அடிப்படை உறுப்பினர் என்ற உரிமையில் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளார்’ எனவும் கூறியுள்ளார். 

அதே கட்சியை சேர்ந்த, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், லோக்சபா தேர்தலில் தன் தந்தையை களம் இறக்க திட்டமிட்டு, விருப்ப மனு தாக்கல் செய்துள்ளார். இத்தனைக்கும், விஜயபாஸ்கர் அரசியல் பிரவேசத்திற்கு முன்பிருந்தே, அதிமுக.,வில் இருந்து வருபவர் தான் அவரின் தந்தை சின்னத்தம்பி. 

அவர், புதுக்கோட்டை மாவட்டடம், அன்னவாசல் ஒன்றிய தலைவராக இருந்தவர். பின், தன் மகனுக்கு சீட் வாங்கி கொடுத்து, தற்போது, மாநில அமைச்சரவையில் முக்கிய புள்ளியாகவும் வலம் வருகிறார். 

அதிமுக.,வை சேர்ந்த மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமாரின் மகன் ஏற்கனவே, எம்.பி.,யாகி, டெல்லியில் கால் பதித்துவிட்டார். மீண்டும் களம் இறங்குவதற்கான வாய்ப்புகளும் பிரகாசமாகவே உள்ளன. 

கடந்த தேர்தலில், திமுக., மூத்த தலைவர்  துரைமுருகன், தன் மகன் கதிர்ஆனந்திற்கு இடம் ஒதுக்கவில்லை என்று பல நாட்கள் கருணாநிதி, ஸ்டாலினுடன் கோபத்தில் இருந்தார். அவரை, திமுக நிர்வாகிகள் சமாதானம் செய்தனர். இந்த முறை திமுகவில் விருப்ப மனு பெற்றவர்களில், ஒவ்வொரு தொகுதிக்கும் ஒரு வாரிசு விருப்ப மனு அளித்துள்ளனர்.

தமிழகம் எனக்கு...டெல்லி உனக்கு... உச்சகட்டத்தில் வாரிசு அரசியல்!

இவர்களில் பெரும்பாலானோருக்கு இடம் ஒதுக்கப்படும் என்று திட்டமிட்ட ரீதியில் தகவல்கள் பரப்படுகின்றன.  அதன்படி,  வேலுாரில் கதிர் ஆனந்த், கள்ளக்குறிச்சியில், பொன்முடி மகன் கவுதம் சிகாமணி, திருவண்ணாமலையில் ஏ.வ. வேலுவின் மகன் கம்பன், கோவையில் பொங்கலுார் பழனிசாமி, ஆவுடையப்பன், சுப.தங்கவேலன் ஆகியார் தங்கள் மகன்களுக்காக சீட்டு கேட்டுள்ளனர். 

இதில் கவுதம் சிகாமணி போட்டியிட வேண்டும் என்பதற்காக, ஐஜேகே தலைவர் பச்சமுத்துவுக்கு, அவர் விரும்பி கேட்கும் கள்ளக்குறிச்சி தொகுதி ஒதுக்கப்படாது எனவும் தகவல் வெளியாகியுள்ளது. அவர், பெரம்பலுாரில் களம் இறக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது. 

இந்த முறை, அப்பா துரைமுருகன், மகன் கதிர் ஆனந்திடம் நேர் முகத் தேர்வு நடத்தி, வெற்றிவாய்பை அறிந்து இடம் ஒதுக்கீடு செய்யப் போகிறார். 

தமிழகம் எனக்கு...டெல்லி உனக்கு... உச்சகட்டத்தில் வாரிசு அரசியல்!

இது ஏதோ திமுக, அதிமுக என்று இல்லை. பெரும்பாலான கட்சிகளின் நிலை இது தான். இவர்கள், மக்களை அல்ல, கட்சியின் தொண்டர்களை தான் ஏமாற்றுகின்றனர். ஏதோ மக்கள் தொண்டு என்பது, பரம்பரை சொத்து போல வழிநடத்தும் இவர்கள் தான், ஜனநாயகம் பற்றி பேசுகின்றனர். 

ஏதோ தமிழகத்தில் தான் இந்த நிலை என்றில்லை. பீஹார், காஷ்மீர், மஹாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா என, நாடு முழுவதும் அரசியல் வாரிசுகளின் தலைதுாக்கல் முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது. 

இதே நிலை தொடர்ந்தால், நாடு முழுவதும் கொடுங்கோல் மன்னராட்சி மலரவே வழி வகுக்கம். கட்சியையோ, சின்னத்தையோ பார்க்காமல், வேட்பாளர் யார், அவரின் பின்னணி என்ன என்பதை உணர்ந்து, ஓட்டளிக்கும் நிலை வரும் வரை, வாரிசு அரசியல் தொடர்வது மட்டுமின்றி, இன்னும் நீண்டு கொண்டே செல்லும் என்பது தான் நிதர்சனம். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP