பெரிய கோடு போடலாமே சூர்யா...

புதிய கல்விக் கொள்கை பற்றிய விமர்சனங்கள் கொடி கட்டிப் பறக்கின்றன. அதற்கு மாற்று முறை குறித்து யாரும் பேசவில்லை. இந்த இந்த திட்டங்களில் குறை இருக்கிறது இவற்றை இப்படி தீர்க்கலாம் என்று கூறுவதற்கு யாரும் தயாராக இல்லை. அப்படி கூறினால் மட்டுமே ஆரோக்கியான விஷயமாக இருக்கும்.
 | 

பெரிய கோடு போடலாமே சூர்யா...

வீரத்தை வெளிப்படுத்தும் எளிய வழி, எதிர்ப்பு காட்ட இயலாத சொங்கிகளை  போட்டு சாத்துவது. பகுத்தறிவுவாதிகள் பிரச்சாரத்தை பார்த்தல், இதை எளிதில் புரிந்து கொள்ளலாம். தமிழகத்தில் இதே விதிமுறைதான் தற்போது கடைபிக்கப்படுகிறது. எந்த திட்டமாக இருந்தாலும், மத்திய அரசை கண்ணை மூடிக் கொண்டு எதிர்ப்பதை தங்களின் வீரத்தை காட்டும் வழிமுறையாக வைத்துக் கொண்டுள்ளனர். 

நடிகர் சூர்யா, சமீபத்தில் அந்த பட்டியலில் சேர்ந்துள்ளார். மத்திய அரசு அறிமுகம் செய்துள்ள புதிய கல்விக் கொள்கை குறித்து சூர்யா தன் கருத்துக்களை சமீபத்தில் கூறினார். அந்த கருத்தின் அடிப்படையில் விவாதம் நடப்பதற்கு பதிலாக சூர்யா மீது தாக்குதல், எதிர்தாக்குதல் தொடங்கிவிட்டது.

தனக்கு ஆதரவு உள்ளது என்பதை அறிந்த சூர்யா, மேலும் மேலும் இது குறித்து கருத்துகள் கூறி வருகிறார். சமீபத்தில் அவர் கூறிய கருத்து, பணம் இருந்தால் விளையாடு என்பதற்கு சூதாட்டமா கல்வி என்று கூறி உள்ளார்.

இன்றைக்கு கல்வி சூதாட்டமாகத்தான் உள்ளது. தமிழதக்தில் சமச்சீர் கல்வி, சிபிஎஸ்இ, நவோதயா, மெட்ரிக் போன்ற கல்வித் திட்டங்கள் உள்ளன.

14விதமான இலவச பொருட்கள், பெரும்பாலும் வேலை பார்க்காத  தரமான ஆசியர்கள், சிறப்பான சமச்சீர் கல்வி என்று அரசு பள்ளிகள் இயங்கி வருகின்றன. ஆனால் இத்தனை சலுகைகள் இருந்தும், பள்ளிகள் மூடும் நிலைக்கு ஆளாகி வருகின்றன. மாணவர் சேர்க்கை இல்லை என்ற நிலை.

இன்னொருபுறம், முதல்நாள் இரவே சென்று பள்ளிவாயிலில் படுத்துக் கொண்டு மறுநாள் காலை மாணவர்கள் சேர்க்கைக்கான விண்ணப்பம் வாங்குவதே சாதனையாகிவிட்டது. திருச்சியில் ஒரு பள்ளியில் பெற்றோரின் வருமானவரி கட்டியதற்கான சான்றிழ் கொடுத்தால் தான், ப்ரீகேஜி இடம் கிடைக்கும். 

சென்னையில் எல்கேஜிக்கு அரசு நிர்ணயம் செய்த கட்டணம் குறைந்தபட்சம் 7 ஆயிரம். திருச்சியில் இது சிறிது குறைவு. இப்படிப்பட்ட சூழ்நிலையில், தனியார் பள்ளிகள் இருக்கின்றன. ஒரு லட்சம் ரூபாய் வரை கல்வி கட்டணம் வசூல் செய்யும் பள்ளிகள் இருக்கின்றன. இவர்கள் தான் உண்மையில் சூதாட்டம் நடத்துகிறார்கள்.

கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு, மெட்ரிக் பள்ளி இயக்குனர் ஒருவர், கல்வியாளர்களுக்கு ஆலோசனை கூறும் போது, மாணவர்கள் உயிர் தான் முக்கியம்.நேர்மையான வழியில் 100 சதவீதம் தேர்ச்சி என்று பேசினார். இப்படிப்பட்ட சூழ்நிலையில் இருக்கும் கல்வி நிலைக்கு சூர்யா என்ன பதில் சொல்லப் போகிறார்.

புதிய கல்விக் கொள்கை பற்றிய விமர்சனங்கள் கொடி கட்டிப் பறக்கின்றன. அதற்கு மாற்று முறை குறித்து யாரும் பேசவில்லை. இந்த இந்த திட்டங்களில் குறை இருக்கிறது இவற்றை இப்படி தீர்க்கலாம் என்று கூறுவதற்கு யாரும் தயாராக இல்லை. அப்படி கூறினால் மட்டுமே ஆரோக்கியான விஷயமாக இருக்கும்.

நீட் தேர்வில் அரசு பள்ளி மாணவன் ஒருவர் கூட மருத்துக்கல்லுாரியில் சேரவில்லை. உண்மையில் வருத்தப்பட வேண்டிய விஷயம் தான். இதற்கு அந்த மாணவர்களை தேர்வுக்கு தேவையான திறமையை வளர்ப்பது தான் தீர்வு. அதற்கு பதிலாக தேர்வையே ரத்து செய் என்கிறோம். இதற்கும் தனியார் பள்ளிகளில் தேர்வு காலம் வரை மாணவனை சேர்த்துக் கொண்டு கடைசி நேரத்தில் பள்ளியில் இருந்து வெளியே அனுப்பியோ, அல்லது சம்பந்தப்பட்ட மாணவனை தனித் தேர்வராக ஏற்பாடு செய்தோ தங்கள் பள்ளியின் நுாறு சதவீத தேர்ச்சியை தக்க வைத்துக் கொள்ளும் தனியார் பள்ளி நிர்வாகத்திற்கும் எந்த வேறுபாடும் கிடையாது.

நகரத்தார்கள், நாடார்கள் உட்பட பலவிதமான ஜாதியினர் கல்விக்கு கொடுத்த முக்கியத்துவும் அதிகம். அவர்கள் சொந்த காசில்தான் பள்ளி நடத்தினார்கள். நாடார்களை பொறுத்தளவில் கிறிஸ்தவ நாடார்களுடன் போட்டி வேறு. இப்படிப்பட்டவர்கள் கல்வி கடவுளாக இருந்த வரை, எல்லா ஏழைகளும் எளிதில் உயர்கல்வி கற்றார்கள். ஆனால் சாராயம் காய்ச்சுபவர்கள், ஒரே முதலீடு ஓகோ வருமானம் என்று நினைக்கும் வியாபாரிகள் கல்விக் கடவுள் அவதாரம் எடுத்த பிறகு பணக்கார்களுக்கு மட்டும் கல்வி என்றாகிவிட்டது.

இந்த பிரச்னைக்கு தீர்வு காணவும், ஏழை மாணவர்கள் கல்வித் தரம் உயரவும், அரசு முயற்சி செய்தால் மட்டுமே முடியும். அதை எதிர்த்து வரவிடாமல் தடுப்பதற்கும், தனியார் கல்வி நிறுவனங்களை பாதுகாக்கவும் தான், தற்போது நடக்கும் போராட்டங்கள் உதவி செய்யும். இந்த போராட்டத்திற்கு சூர்யா போன்றவர்கள் வெறும் அம்பு தான்.

இது போன்ற போராட்டங்களை ஒடுக்க, மத்திய அரசுக்கு சில ஆண்டுகள் பிடிக்கிறது.   இந்திரா அம்மையார் வங்கியாளர்கள் கொட்டம் அடக்க, ஒரே நாளில் வங்கிகளை தேசிய மயமாக்கினார். அதே போல ராஜ்யசபாவில் பெரும்பான்மை கிடைக்கும் காலத்தில், தனியார் பள்ளிகளையும் அரசு ஏற்கும் என்று சொன்னால், அங்கு வேலை செய்யும் ஆசிரியர் அடிமைகளுக்கு விடுதலை கிடைக்கும், அதே நேரத்தில் கல்வி வியாபாரிகளுக்கு ஆப்புதான் கிடைக்கும்.

இதை நிறைவேற்றிவிட்டு, சிவாஜி ஸ்டில் ரஜினியை போல மோடியும், ‛மோடி டா’ என்று காலரை துாக்கி விட்டுக் கொள்வார். அப்போது அவரை எதிர்ப்பவர்களுக்கு கால்களே இருக்காது. இது போன்ற நிலை ஏற்படாமல் தடுக்க நம் கல்வியாளர்கள் மாற்றுத்திட்டத்தை உருவாக்க முன்வர வேண்டும். 

ஆனால் அவர்களோ, மத்திய அரசுக்கு இணையாக சம்பளம், ஓய்வூதியம், மருத்துவப்படிகள் ஆகியவற்றை அமல்படுத்த வலியுறுத்தி போராட்டம் நடத்துவதில் பரபரப்பாக இருக்கிறார்கள். அதுவரை புதிய கல்விக் கொள்கைக்கு கருத்துக் கூறும் கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும். நடிகர் சூர்யாவும் மாற்றுக் கல்வித் திட்டத்தை உருவாக்கும் ஏற்பாடுகளை செய்ய முன்வர வேண்டும்.

newstm.in

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP