கலகம் பிறந்தால் தான் நியாயம் பிறக்கும்...!

சிலபல சங்கடம், சட்டத் தலையீட்டிற்குப் பிறகு... எந்தத் தலைவர் பெயரிலும் ஆணியே புடுங்க வேண்டாம் என்று முடிவாகி. மாநிலம் முழுவதற்கும் ஒரே பெயர் “தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம்” என்று பெயர் வச்சுட்டாங்க..
 | 

கலகம் பிறந்தால் தான் நியாயம் பிறக்கும்...!

இன்றைய இளைய தலைமுறைகளுக்கு அதிகம் தெரியாத விஷயம்...

தமிழக போக்குவரத்துக் கழகப் பேருந்துகளுக்கு சில விடுதலைப் போராட்ட வீரர்களின் பெயர்களைச் சூடியிருந்தார்கள். எ.கா: தீரன் சின்னமலை, இராணி மங்கம்மா, கட்டபொம்மன், நேசமணி போன்று...

கட்டபொம்மு நாயக்கர்கள் அடையாளம், சின்னமலை கவுண்டர்கள் அடையாளம் எனும்படியாக மக்களும் பார்க்க ஆரம்பித்து விட்டார்கள். எனவே என் சாதி அடையாளத்திற்கு ஒரு பெயர் வைனு எல்லா சாதிக்காரர்களும் கோரிக்கை வைத்தார்கள். பணம் பதவி விஷயத்தில் தான் திராவிடக் கட்சிகள் படு கறார். இந்த விஷயத்தில் திராவிடக் கட்சிகள் கஞ்சமே படமாட்டார்கள். பேரு தானே வச்சுக்கோ என்று கோட்டத்திற்கு ஒரு பெயராக இருந்ததை மாவட்டத்திற்கு ஒரு தலைவர் பெயர், ஒவ்வொரு ரூட்டுக்கும் ஒரு தலைவரின் பெயரை வைக்க வேண்டிய சூழலாயிடுச்சு. அதே மாதிரி மாவட்டங்களுக்கு அந்தந்த தலைநகர் பேரை விட்டுவிட்டு ஜாதித் தலைவர்கள் பெயரை வைத்து அழிச்சாட்டியம் பண்ணிட்டிருந்தார்கள்.  காமராஜர் மாவட்டம், பசும்பொன் மாவட்டம் என்று…

அப்புறம் என்ன? நாய்க்கருக்கும் கோனாருக்கும் சண்டை வந்தால், கோனார் கட்டபொம்மு பஸ்ஸை நொறுக்குவதும், நாயக்கர் அழகுமுத்து கோன் பஸ்ஸை நொறுக்கவதும் மட்டும் தான் பாக்கி, மற்ற  ரசாபாசங்கள் பலவகையில்  நிகழத் தொடங்கி விட்டது. சிலபல சங்கடம், சட்டத் தலையீட்டிற்குப் பிறகு... எந்தத் தலைவர் பெயரிலும் ஆணியே புடுங்க வேண்டாம் என்று முடிவாகி. மாநிலம் முழுவதற்கும் ஒரே பெயர் “தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம்” என்று பெயர் வச்சுட்டாங்க.. மாவட்டத் தலைநகர் பெயரிலேயே மாவட்டப் பெயர்கள் மாறிடுச்சு..

கலகம் பிறந்தால்தான் நியாயம் பிறக்கும் என்பது தமிழக கிராமங்களின் நம்பிக்கையான மொழி!

அதே போல ஜாதி அடிப்படையிலான  சலுகைகள் தமிழ்நாட்டில் 65% இட ஒதுக்கீட்டில்  35% தான் மிச்சம் இருக்கு. அதையும் மிச்சம் இருக்கிற சாதிகளுக்குப் பிரிச்சு கொடுத்து விட்டால்  தொந்தரவே இல்லாமல் அந்தந்த  ஜாதிக்காரங்க அவங்கவங்க  வேலையைப் பிரிச்சுக்குவாங்க. அரசாங்கத்துக்கும் அரசியல்வாதிகளுக்கும் ஜாதியை வச்சு தலைவலி வராது. ஒரு வேளை வந்தாலும் அது உட்சாதி சண்டையாகவே கழிந்து விடும். இன்னிக்கு மதம் மாறுவது போல நாளைக்கு சலுகைக்காக ஜாதி மாறி கல்யாணம், காது குத்துனு கலந்து கலந்து, ஒரு கட்டத்தில் ஜாதிகள் தானா அழிஞ்சிடும். நமக்கும் சம்முவ நீதியை நறுக்குனு நிலை நாட்டிடலாம். அது வரை பாரதியின் இந்தப் பாடலை இப்படி மாத்திப் பாடிட்டு இருப்போம்.

எக்கோட்டா வாய்த்திடு மேனும் - நம்மில்
யாவர்க்கும் அந்த நிலைபொது வாகும் நூற்றி
முப்பது கோடியும் வாழ்வோம் - வீழில் நூற்றி
முப்பது கோடி முழுமையும் வீழ்வோம்
வந்தே மாதரம் என்போம் எங்கள் சலுகைப் பேய்களை வணங்கியே வாழுவோம்!

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP