தமிழ் தேசியத்திற்கு குட்டு வைத்த ரங்கராஜ் பாண்டே!

சுதேசி விழிப்புணர்வு மாநாட்டுக் கூட்டத்தில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட பிரபல பத்திரிக்கையாளர் ரங்கராஜ் பாண்டே, தான் ஆர்.எஸ்.எஸ் –உடைய பொருளாதாரப் பிரிவில் பேச இருப்பதால் என்னை மோடியின் ஆள் என்று இனி முத்திரை குத்தி விடுவார்கள்.
 | 

தமிழ் தேசியத்திற்கு குட்டு வைத்த ரங்கராஜ் பாண்டே!

சுதேசி விழிப்புணர்வு மாநாட்டுக் கூட்டத்தில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட பிரபல பத்திரிக்கையாளர் ரங்கராஜ் பாண்டே, தான் ஆர்.எஸ்.எஸ் –உடைய பொருளாதாரப் பிரிவில் பேச இருப்பதால் என்னை மோடியின் ஆள் என்று இனி முத்திரை குத்தி விடுவார்கள். ஏற்கனவே நான் மோடியால் நியமிக்கப்பட்ட ஏஜெண்ட் என்பது போல சமூகவலைதளங்களில் வதந்தி கிளப்பி வருகின்றனர். இப்பொழுது இன்னும் அழுத்தமாகப் பேசுவார்கள் என்றார். 

சுதேசி என்பது ஆர்.எஸ்.எஸ் தலைவரோ, மோடியோ உருவாக்கியது அல்ல. அது கரம்சந்த் மோகன் தாஸ் காந்தி உருவாக்கியது என்றொரு அழுத்தம் கொடுத்தார். அது, நீ ஏன் சுதேசி இயக்க கூட்டத்தில் பேசப் போகிறாய் என்று கேட்டவர்களுக்கு பொது வெளியில்  பதில் சொன்னதாக அமைந்தது. 

தமிழ் தேசியத்திற்கு குட்டு வைத்த ரங்கராஜ் பாண்டே!

அதே போல, இந்திய தேசியம் பேசுகிறவர்களை எதிரியாகப் பார்க்கிறார்கள். ஏன்ய்யா நீங்க மட்டும் தமிழ் தேசியம்னு பேசலாம் அவர்கள் இந்திய தேசியம்னு பேசக் கூடாது என்று கிண்டல் அடித்தார். முத்தாய்ப்பாக, சுதேசி என்பது ஏதோ புரியாத விசயம் அல்ல அண்ணன் சீமான் பேசுறது தான் சுதேசி. அவர் சின்ன அளவில் பேசுறார். இவங்க பெரிய அளவில் சுதேசி பேசுகிறார் என்று கலாய்த்தார். இனி, இந்தப் புள்ளியைப் பிடித்துக் கொண்டு சீமான் தம்பிகள் பாண்டேவைக் காய்ச்சி எடுக்கப் போகிறார்கள் பாருங்கள் என்று அருகில் நின்றவர் சொல்லிச் சிரித்தார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP