சூடு பட்ட பூனையா திருமாவளவன்..?

பாம்புக்கு தலையும் மீனுக்கு வாலும் காட்டுவது என்பார்களே அதே நிலைப்பாடு தான் இதும். ஆனால் இதை வெளியே சொல்ல முடியாது என்பதால் கூட கொள்கை, நிலைப்பாடு போன்ற வார்த்தை ஜாலங்களால் பேட்டி அளிப்பது எல்லாமே.
 | 

சூடு பட்ட பூனையா திருமாவளவன்..?

கொள்கை, கோட்பாடுகளுடன் கட்சி நடத்தினால் கூட தொடர்ந்து சில தேர்தலில் வெற்றி பெறாவிட்டால் அரசியலை தொடர்வது கேள்விக்குறியாகிவிடும். 

இந்த சூழ்நிலையில்தான், கூட்டணிக் கட்சிகள் தயவு தேவை. கூட்டணியில் விரல்விட்டு என்னக் கூடிய கட்சி இருந்தால் அவற்றிக்கு உரிய சின்னத்தில் நிற்க வாய்ப்பு உள்ளது. அவ்வாறு இல்லாத நிலையில் 'மாப்பிள்ளை இவருதான் சட்டை மட்டும் என்னுடையது'கதை தான். அதிலும் அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக இல்லாத போது,ஏதோ ஒரு கட்சியின் சின்னத்தில் போட்டியிடுவதற்கு பதிலாக கூட்டணிக்கு தலைமை வகிக்கும் கட்சியின் சின்னத்தில் போட்டியிட்டால் வாக்காளர்களுக்கு தேவையில்லாத குழப்பங்கள் ஏற்படுத்தாமல், எளிதில் வெற்றி பெறலாம். 

சூடு பட்ட பூனையா திருமாவளவன்..?

ஆனால் எந்த கட்சி சின்னத்தில் போட்டியிடுகிறாரோ அவர் அந்த கட்சியை சேர்ந்தவராகத் தான் கருதப்படுவார். எந்த பிரச்னையாக இருந்தாலும் கூட சம்பந்தப்பட்ட கட்சி கொறடா உத்தரவை மீற முடியாது. இதனால் தான் இந்த டீலிங்கிற்கு யாரும் ஒத்துவர மாட்டார்கள். 

தற்போது கூட திமுகவிற்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கும் இடையே கூட்டணி அமைப்பதில் இந்த சின்ன பிரச்னைதான் பெரிதாக உருவெடுத்தது. திமுகவிற்கும் எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்ற நிலை, விடுதலை சிறுத்தைகளுக்கு தொடர்ந்து கட்சி நடத்த தேர்தலில் வெற்றி பெற வேண்டிய கட்டாயம். இதன் காரணமாக இருகட்சிகளும் கூட்டணி சேர வேண்டிய கட்டாயம். இதன் காரணமாக அரசியல் உலகில் முதல் முறையாக புதுவித தீர்வு எட்டப்பட்டது.

அதாவது விடுதலை சிறுத்தை கட்சித் தலைவர் திருமாவளவன் சுயேட்சை சின்னத்தில் போட்டியிடுவார். அந்த கட்சியின் பொதுச் செயலாளர் ரவிக்குமார் விழுப்புரம் தொகுதியில் உதய சூரியன் சின்னத்திலும் போட்டியிடுகிறார். இதில் இரண்டும் தனித் தொகுதி என்பது குறிப்பிடத்தக்கது. 

இரண்டு தொகுதியிலும் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக விழுப்புரம் தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறோம். எல்லா நலன்களையும் கருத்தில் கொண்டு விவாதித்து தான் இந்த நிலைப்பாட்டை எடுத்துள்ளோம் என்கிறார் தொல். திருமாவளவன். . 

இப்படி பேட்டியில் அவர் வெளிப்படையாக போட்டு உடைத்தாலும் சொல்ல மறந்த கதை ஒன்று உள்ளது. 

சூடு பட்ட பூனையா திருமாவளவன்..?

கடந்த 2001ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் திமுக கூட்டணியில் மங்களூர் தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு திருமாவளவன் வெற்றி பெற்றார். பின்னர் நடந்த லோக்சபா தேர்தலில் கடலுார் தொகுதியில் போட்டியிட திமுக கூட்டணியில் சீட்டு கேட்ட போது மறுக்கப்பட்டது. இதனால் கூட்டணியில் இருந்து 2004ம் ஆண்டு வெளியேற முடிவு எடுத்தார். அப்போது உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டதால் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய கட்டாயம். இதனால் பதவியை ராஜினாமா செய்து விட்டு கூட்டணியில் இருந்து வெளியேறினார். 

தற்போதும் கூட எதிர்காலத்தில் இது போன்ற சிக்கல் ஏற்படலாம். அப்போது உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட்டால் தன் எம்பி பதவியை ராஜினாமா செய்ய வேண்டி இருக்கலாம். ஒரு கால் அமைச்சர் பதவி கிடைக்கும் சூழ்நிலையில் திமுக கூட்டணியில் இருந்தால் அந்த கட்சியின் கணக்கில் அது கிடைக்காமல் போகலாம். அதன் காரணமாக தான் இந்த முறை தான் தனி சின்னத்திலும், ரவிக்குமார் உதய சூரியன் சின்னத்திலும் போட்டியிடுகிறார். கூட்டணியைவிட்டு வெளியே வந்தால் ரவிக்குமார் பதவி மட்டும் போகும். அமைச்சர் பதவி என்றால் விடுதலை சிறுத்தைகள் தனி என்று தனக்கு பெற்றுக் கொள்ளலாம். இது தான் தற்போது விடுதலை சிறுத்தைகள் இரு சின்னத்தில் போட்டிடுவதாக எடுத்த நிலைப்பாடு. 

பாம்புக்கு தலையும் மீனுக்கு வாலும் காட்டுவது என்பார்களே அதே நிலைப்பாடு தான் இதும். ஆனால் இதை வெளியே சொல்ல முடியாது என்பதால் கொள்கை, நிலைப்பாடு போன்ற வார்த்தை ஜாலங்களால் பேட்டி அளிப்பது எல்லாமே.  

newstm.in

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP