டிக் டாக் குடும்பத்திற்குள் சுதந்திரத்தை அனுமதிப்போம் !

டிக்டாக் போன்ற செயலிகள் எலிப் பொறி என்பதை உணர்ந்து கொண்டு, வயிறு நிறைய உணவு கொடுத்தால் போதும், எலி எப்போதும் சந்தோஷமாக வாழும். இதை புரிந்து கொள்வது தான் டிக் டாக் போன்ற செயலிகளை தோல்வி அடைய செய்யும் வல்லமை கொண்டது.
 | 

டிக் டாக் குடும்பத்திற்குள் சுதந்திரத்தை அனுமதிப்போம் !

டிக் டாக் செயலிக்கு நிபந்தனையுடன் சென்னை ஐகோர்ட் மதுரைக் கிளை அனுமதி வழங்கி உள்ளது. இதில் பெண்கள் தங்களை அறியாமல் சிக்கி கொண்டு 400க்கும் மேற்பட்டவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். மக்கள் மனங்களை திசை திருப்பி விடுகிறது என்று எல்லாம் ஏராளமான குற்றச்சாட்டுகள் டிக்டாக் செயலி மீது. 

இது குறித்து நடிகை கஸ்துாரி கூறுகையில், நாட்டில் நுாற்றுக் கணக்கான ஆபாச இணையதளங்கள் உலாவருகின்றன. அதில் கெட்டுப் போகாத சமுதாயம் டிக் டாக் செயலி மூலம் கெட்டுப் போகிறார்கள் என்பது என்ன நியாயம். காரணம் அது அல்ல, ஆபாச வீடியோக்களில் நடிகைகள் நடனம் ஆடுகிறார்கள். ஆனால் டிக் டாக் செயலியிலோ குடும்பத்தை சேர்ந்தவர்கள் ஆடுகிறார்கள். அதனால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை என்றார். 

இது தான் டிக் டாக் செயலி போன்றவைகளுக்கு எதிராக தடைவிதிக்க வேண்டும் என்று கத்துவதற்கு காரணம். ஒரு நடிகையின் தீவிர ரசிகன் கூட தன் மனைவி அவ்வாறு ஆடை உடுத்தவோ, பொதுவெளிகளில் நடைபோடவோ அனுமதிக்க மாட்டான். அந்த அளவிற்கு நடிகைக்கும், தன் குடும்பத்தினருக்கும் வேறுபாடு, நிழலுக்கும் நிஜத்திற்கும் வேறுபாடு. இப்படிப்பட்ட இரட்டை நிலைதான் குடும்பத்தினரை தடம்மாற செய்கிறது. 

வீட்டில் பாடினால் கணவன் அல்லது மனைவி என்ன நினைப்பார்களோ என்ற பயம் தான் பாடல், ஆடல்களை பதவிவேற்றம் செய்ய வைக்கிறது. அதை பார்க்கிறவன் அல்லது பார்க்கிறவர்கள் மனதில் செக்ஸ் ஆட்டி வைப்பதால் பாராட்டாக மாறுகிறது. இத்தனை நாள் குடும்பம் நடத்திய கணவன், மனைவி தன் திறமையை சீண்டக் கூட இல்லை, ஆனால் முகம் தெரியாத இந்த நண்பன், அல்லது நண்பி உடனே புரிந்து கொண்டு விட்டாளே என்ற எண்ணம் தான் குடும்பத்திற்குளான உறவில் விரிசல் ஏற்படுகிறது. 

முன்பு பாடத் தெரிந்தவள் வீட்டில் சமைக்கும் போதும், சாமி குடும்பிடும் போது, உறவினர் வீட்டு திருமணங்களில் மதியம் கிடைக்கும் இடைவேளையின் போதும் பாடுவாள். உறவினர்கள் மதிப்பார்கள். களை கெடுக்கும் போதும் பாட்டுதான், கட்டையில் போகும் போதும் பாட்டுதான். ஒரு சில குடும்பங்களில் இசைக் கருவிகளை தூக்கிக் கொண்டு திருமணத்திற்கு செல்பவர்களும் இருக்கிறார். 

இதைப் போலவே தான் நடனமும். குடும்பத்திற்குள் அங்கீகாரம் கிடைக்கும் யாரும் அதை வெளியில் தேட மாட்டார்கள். அப்படி தேடினால் அவர்களுக்கு பின்னணியில் குடும்பமே இருக்கும். தற்போது அப்படி இல்லாமல் தனி மனித சுந்திரம் என்று பேச தொடங்கி விட்டதால், குடும்பத்திற்குள் சுதந்திரம் அவசியமாகிறது. ஒரு காலகட்டத்தில் பெண்களை சாலையில் அடித்தால் கூட கேட்பதற்கு ஆள்கிடையாது. யாரேனும் தைரியமான நபர் சம்பந்தப்பட்ட ஆண்மகனை ஓங்கி அறைந்து வீட்டிற்கு விரட்டி விடுவான். அதன் பின்னர் விவாகரத்து செய்து கொள்ளலாம் என்று சட்டம் வந்தது, பெண்களும் தங்கள் காலில் நிற்பதற்கான வாய்ப்பை உருவாக்கி கொண்டார்கள். இப்போது வீட்டிற்குள் கூட கை நீட்ட முடியவில்லை. காரணம் விவாகரத்து பயம். அந்த பயம் தான் டிக் டாக் போன்ற செயலிகளின் மீதும் ஏற்பட வேண்டும். 

அதற்கு மனைவி, கணவன், குழந்தைகளின் திறமையை அங்கீகரிக்கும் பக்குவம் வர வேண்டும். அப்படி உருவாகும் பட்சத்தில் இதுபோன்ற விபரீத விளையாட்டுகளில் அவர்கள் ஈடுபட மாட்டார்கள். 

அதே போல இது போன்ற விபரீதங்களில் சிக்கி கொண்டால் கூட, அவள், அவன் பாவம் என்று மன்னித்து ஏற்றுக் கொள்ளும் பக்குவம் வர வேண்டும். அப்போது சம்பந்தப்பட்டவர்கள் சிக்கலில் இருந்து வெளியே வர முடியும். தாய், தந்தை, கணவன், மனைவிக்கு தெரியக் கூடாது என்று எண்ணும் போதுதான் தவறுகள் புதைகுழிகளாக மாறி வெளியே வர இயலாத வகையில் சிக்க வைத்து விடுகிறது.

டிக்டாக் போன்ற செயலிகள் எலிப் பொறி என்பதை உணர்ந்து கொண்டு, வயிறு நிறைய உணவு கொடுத்தால் போதும், எலி எப்போதும் சந்தோஷமாக வாழும். இதை புரிந்து கொள்வது தான் டிக் டாக் போன்ற செயலிகளை தோல்வி அடைய செய்யும் வல்லமை கொண்டது. 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP