காவல்துறை உங்கள் நண்பன்தானா?

காவல் துறை உங்கள் நண்பன் என்று கூறிக்கொள்ளும் தமிழக காவல் துறையில் ஒரு சில காவலர்கள் நடந்து கொள்ளும் முறையினால் ஒட்டு மொத்த காவல் துறைக்குமே களங்கம் ஏற்படுகிறது.
 | 

காவல்துறை உங்கள் நண்பன்தானா?

காவல் துறை உங்கள் நண்பன் என்று கூறிக்கொள்ளும் தமிழக காவல் துறையில் ஒரு சில காவலர்கள் நடந்து கொள்ளும் முறையினால் ‌ஒட்டு மொத்த காவல் துறைக்குமே களங்கம் ஏற்படுகிறது.
 
சென்னையில் போக்குவரத்து காவலர்கள் தகாத வார்த்தையில் திட்டியதால் கால்டாக்சி ஓட்டுநர் ஒருவர் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

காவல்துறை உங்கள் நண்பன்தானா?

திருவண்ணாமலை மாவட்டம ஆரணியைச் சேர்ந்தவர் ராஜேஷ். இவர் சென்னை ராமாபுரத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் கார் ஓட்டுநராக பணிபுரிந்து வந்தார். கடந்த 25ம் தேதி அண்ணாநகர் பாடி மேம்பாலம் அருகே ராஜேஷ் காருடன் சாலையோரம் நின்று கொண்டிருந்த போது அங்கு வந்த போக்குவரத்து காவலர்கள் அவரை தகாத வார்த்தையால் மிகவும் மோசமாக திட்டியுள்ளனர்.

காரில் பெண் பயணி ஒருவரின் முன்னிலையில் காவலர்கள் திட்டியதால் மனமுடைந்த ஓட்டுநர் தற்கொலை செய்து கொண்டார். மேலும் தனது சாவுக்கு தமிழக போலீசாரே காரணம் என்ற அவர் பேசிய வீடியோவும் சமுக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

காவல்துறை உங்கள் நண்பன்தானா?

ஒரு சில காவலர்கள் வாகன ஓட்டிகளை சோதனை என்ற பெயரில் தடுத்து நிறுத்தி அவர்களிடம் ஒருமையில் பேசும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகின்றன. இதற்கு முன் சென்னை தரமணியில் கால் டாக்சி டிரைவரை போலீசார் தாக்கியதால் அவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவமும் அரங்கேறியது.

காவல்துறை உங்கள் நண்பன்தானா?

இந்த சம்பவங்கள் மட்டுமல்ல. சில வருடங்களக்கு முன்னர் கும்மிண்டிப்பூண்டி அருகே ஆய்வாளர் ஒருவர் காவல்துறை வாகனத்தை சொந்த காரணத்துக்காக எடுத்துச் சென்றபோது, 4 பேர் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியுள்ளார். 

2016ஆம் ஆண்டு சென்னை அயனாவரத்தில், காவல்துறை வாகனம் மோதி இரு பள்ளி மாணவர்கள் உயிரிழந்தனர். காவல்துறை வாகன ஓட்டுநர் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. காவல் துறையின் அலட்சியத்தை எங்கு போய் சொல்வது? இவர்கள் வழக்குப் பதிவு செய்து சஸ்பெண்ட் மட்டுமே செய்யப்படுகின்றனர். வழக்குகள் என்ன ஆயிற்று என்று வழக்கு பதிந்தவர்களுக்கும் தெரியாது. கிடப்பில் தான் கிடக்கும்.  ஒரு சாதாரண மனிதன் ஒரு விபத்தை ஏற்படுத்தினால், தண்டனை உறுதி. காவல்துறையினருக்கு...? 

காவல்துறை உங்கள் நண்பன்தானா?

ஒரு பிரச்னை என்றால் முதலில் செல்லக்கூடிய இடம் காவல்நிலையம் தான். ஆனால் அங்கு பிரச்னையை சொல்லப் போகும் நபரை அங்கிருப்பவர்கள் குற்றவாளியைப் போல் தான் நடத்துவார்கள். புகார் கொடுக்கும் காவல் நிலையம் செல்லும் ஒரு நபரையாவது ஆய்வாளரோ, எழுத்தரோ உட்கார வைத்து பேசியதுண்டோ? அப்புறம் காவல்துறை உங்கள் நண்பன்ன மட்டும் சொல்றாங்க...? நண்பன்னு தோள் மேல கைபோட சொல்லல. பொது மக்கள மதிச்சா போதும்னு தான் எல்லாரும் சொல்றாங்க. 

பயிற்சியின் போது பல நல்ல விஷயங்களை கற்றுக்கொள்ளும் காவலர்கள் அதை பணிக்கு வந்த பின் பின்பற்ற தவறுவது ஏன்? இதற்கு காவல் துறை உயர் அதிகாரிகளோ, காவல்துறையை தன் வசம் வைத்திருக்கும் தமிழக முதல்வரோ நடவடிக்கை எடுப்பார்களா என்பதே சமூக ஆர்வலர்களின் கேள்வியாக உள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP