தியாகராஜ சுவாமி திருக்கோயில் வரலாறு...!

தமிழ்நாட்டின் மிகப் பழமையான கோயில்களுள் ஒன்று தியாகராஜ ஸ்வாமி திருக்கோவில். இக்கோயில், சுமார் 33 ஏக்கர் பரப்பளவில், பல்வேறு தெய்வங்களுக்காகக் கட்டப்பட்ட ஏராளமான சந்நிதிகளுடன் பிரம்மாண்டமாகக் காணப்படுகிறது.
 | 

தியாகராஜ சுவாமி திருக்கோயில் வரலாறு...!

தமிழ்நாட்டின் மிகப் பழமையான கோயில்களுள் ஒன்று தியாகராஜ ஸ்வாமி திருக்கோவில். இக்கோயில், சுமார் 33 ஏக்கர் பரப்பளவில், பல்வேறு தெய்வங்களுக்காகக் கட்டப்பட்ட ஏராளமான சந்நிதிகளுடன் பிரம்மாண்டமாகக் காணப்படுகிறது. இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிரார். 

தியாகராஜ சுவாமி திருக்கோயில் வரலாறு...!

தியாகராஜர் என்றால் கடவுள்களூக்கெல்லாம் ராஜா என்று பொருள். தியாகராஜர் கோயில் எல்லா கோயில்களின் முதன்மையானதாக விளங்குகிறது. இக்கோயிலின் மூலஸ்தானத்தை இரண்டாகப் பிரித்து, ஒரு பகுதியை வன்மிகிநாதர் என்ற பெயரில் வழங்கப்படும் சிவபெருமானுக்கும், மற்றொரு பகுதியை தியாகராஜருக்கும் அர்ப்பணித்துள்ளனர். வன்மிகிநாதருக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ள பகுதியானது, தியாகராஜருக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ள பகுதியைக் காட்டிலும் பழமை வாய்ந்ததாகும். 

தியாகராஜ சுவாமி திருக்கோயில் வரலாறு...!

இகோவிலில் 9 ராஜ கோபுரங்கள், 80 விமானங்கள், 12 பெரிய மதில்கள், 13 மிகப்பெரிய மண்டபங்கள், 15 தீர்த்தக்கிணறுகள், 3 நந்தவனங்கள், 3 பெரிய பிரகாரங்கள் 365 லிங்கங்கள் அடங்கிய இந்த பெரிய கோவிலின் கூடுதல் சிறப்பாகும். இக்கோவிலின் கிழக்கு கோபுரத்தின் உள்புரம் உள்ள 1000 தூண்கள் முற்காலத்தில் திருவிழா காலங்களில் பந்தல் போடுவதற்க்காக அமைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. 

தியாகராஜ சுவாமி திருக்கோயில் வரலாறு...!

இக்கோவிலில் வன்மிகிநாதரின் சந்நிதியில், வழக்கமான லிங்கத்துக்கு பதிலாக, ஒரு புற்று நிறுவப்பட்டுள்ளது. இக்கோயில், ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்த சைவ நாயன்மார்களால் பாடப்பெற்ற தேவாரப் பதிகங்களால், பெரும்புகழ் பெற்று விளங்குகிறது. இவை சோழர் காலத்தில் கட்டப்பட்டது. 1 ஆம் நூற்றாண்ட சார்ந்த தலமாக விளங்குகிறது.  தமிழகத்தின் புகழ்பெற்ற இந்த தலத்தை சுற்றி பார்க்க வேண்டும் என்றால் ஒருநாள் முழுவதும் ஆகும். ஏன்னென்றால் அந்த அளவுக்கு பெரிய சன்னதிகள் இக்கோவிலில் உள்ளன.

தியாகராஜ சுவாமி திருக்கோயில் வரலாறு...!

பத்து நாட்கள் நடைபெறும் திருவிழா இங்கு மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இத்திருவிழா தலத்தில் மிகவும் சிறப்பாக நடைபெறும் விழாக்களில் ஒன்றாகும் மாசி மக நாள் சுந்தரருக்கு பூதகணம் நெல்கட்டி செல்லும் விழா, சித்திரை விழா,ஆடிப்பூரம் விழா, தெப்பதிருவிழா, நிறைபணி விழா ஆகியவை இத்தலத்தின் சிறப்பான விழா நாட்கள் ஆகும். பத்து நாட்கள் நடைபெறும் தேர்த்திருவிழா காலங்களில் இக்கோயிலுக்குச் சென்றால் மிக விசேஷமாக இருக்கும்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP