Logo

ஆசிரியர் போராட்டத்தில் அரசின் மாஸ்டர் பிளான் ‛ஒர்க்கவுட்’

வில்லன் படத்தில், கண்டக்டர் அஜித் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று, கிரண் கல்லுாரி மாணவிகளை அழைத்து வந்து மறியல் செய்வாரே, அதே போல, தற்போது ஜாக்டோ ஜியோ போராட்டமும் முடிவுக்கு வந்து விடும்.
 | 

ஆசிரியர் போராட்டத்தில் அரசின் மாஸ்டர் பிளான் ‛ஒர்க்கவுட்’

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் எப்போது வேலை நிறுத்தம் செய்தாலும், பணப் பலன் மற்றும் அது இல்லாத  சில கோரிக்கைகள் இடம் பெறும். போராட்டம் நடந்த சில நாட்களில், பேச்சுவார்த்தை நடத்தும் போது, பணப் பலன் இல்லாத கோரிக்கைகள் ஏற்கப்படும். 

உடனே சங்கங்கள் வெற்றி வெற்றி என்று கோஷம் இட்டுக் கொண்டே, போராட்டத்தை வாபஸ் பெறும். அரசும் கூட நமக்குதான் எந்த செலவும் இல்லையே, அப்புறம் என்ன வந்தது என்று போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்ததாக மார்தட்டும். 

 

 

ஆசிரியர் போராட்டத்தில் அரசின் மாஸ்டர் பிளான் ‛ஒர்க்கவுட்’இந்த கண்ணா மூச்சி விளையாட்டால் போராட்டம், ஜனநாயக கடமை என்றாகிவிட்டது. ஆனால் இந்த முறை, பணத்தை அடிப்படையாக கொண்ட கோரிக்கை மட்டும் முன்னெடுத்து வைத்திருப்பதால், இரு தரப்பிற்கும் சிக்கல். 
அதனால் தான், அரசு தலையால் தண்ணீர் குடித்தும் கூட, போராட்டத்தை அசைக்க முடிந்ததே தவிர்த்து முடிக்க முடியவில்லை. 

அதே நேரத்தில் அரசின் ஒரே ஒரு அறிவிப்பு, ஆசிரியர்களில் 90 சதவீதம் பேரை, வேலை நிறுத்தத்தை விட்டு பணிக்கு திரும்ப செய்திருக்கிறது. அரசாங்கதின் இந்த மாஸ்டர் பிளான் தான் வெற்றி பெற்றதற்கு காரணம். ஆசிரியர்கள் இடமாறுதல் என்பது அவ்வளவு கடினமானது.

 கவுன்சலிங் முறை அறிமுகம் செய்யும் முன்னர், காசு இல்லாமல் எந்த பணிமாறுதலும் நடக்காது. தற்போது தர்ம நியாயம் பேசும் ஆசிரயர் சங்க பிரதிநிதிகள் தான், வசூலின் வாசல்படியே. இவர்கள் தொல்லைகள் பொறுக்காமல் தான், கவுன்சலிங் முறை அறிமுகம் செய்யப்பட்டது. 

அதிலும் கூட சாலை ஓரத்தில் இருக்கும் பள்ளிகளிகளில் உள்ள காலிப்பணியிடங்கள், கவுன்சலிங் போது வரவே வராது. அவை நிர்வாக காரணம் என்ற அடிப்படையில் நிரப்பபடும். அதில் காசு விளையாடி இருக்கும். 

கவுன்சலிங் மாற்றம் கூட பல விதிமுறைகளை உள்ளடக்கியது. கூடுதல் ஆசிரியர்கள் இடம் பணி நிரல் செய்த பிறகு தான், காலிப்பணியிடங்கள் கணக்கில் காட்டப்படும். ஒரே இடத்தில், 3 ஆண்டுகள் பண்ணியாற்றிவர்கள் மட்டும் இடமாறுதலில் கலந்து கொள்ளலாம். 

அதிலும் பலவிதமான முன்னுரிமைகள் இருக்கின்றன.அவற்றில் சில முறைகேடுகள் அரங்கேற்றப்படும். அப்போது, ஆசிரியர்கள் சங்கங்களை மவுனமாக இருக்க செய்யும் தகுதி படைத்தவர், நினைத்தை சாதித்துக் கொள்வார். 

ஆசிரியர் போராட்டத்தில் அரசின் மாஸ்டர் பிளான் ‛ஒர்க்கவுட்’

 

பொதுவாக தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் கவுன்சலிங் தவிர்த்து, மற்றவை அமைதியாக நடந்து முடியும். இதில், 2 மிகப் பெரிய சங்கங்கள் மற்றும் பல சிறிய சங்கங்கள் உள்ளன. இந்த நிர்வாகிகளுக்கு, பள்ளி முடிந்ததும் மாவட்ட தொடக்க கல்வி அலுவலகத்தில் தான் வேலையே. 

அங்கு வரும் ஆசிரியர்களை நகைக்கடை,சாலை ஓர மோட்டல்களில் அழைப்பது போல அழைத்து, தங்கள் சங்கத்தில் சேர்ப்ப்பார்கள். பின்னர், அவர்கள் கவுன்சலிங்கில் குறிப்பிட்ட இடம் கேட்டு சங்கத்தை அணுகினால், அதற்கு ஏற்ற விதிமுறைகளை எடுத்து வைத்து வாதாடுவார்கள். 

மற்றொரு சங்கம் கடும் எதிர்ப்பு காட்டும். விளைவு சாலை மறியல் உட்பட அரசு கல்லுாரி மாவணர்களுக்கு இணையாக போராட்டங்கள் நடக்கும். 

பிளஸ் 2 மற்றும் ஆசிரியர் பயிற்சி முடிதவர்களுக்கு, அவர்கள் எதிர்பாக்காத சம்பளம் கிடைக்கும். அவர்களுக்கு உயிர் எழுத்து, மெய் எழுத்து நடத்தவும், 5ம் வகுப்பு நடத்தும் ஆசிரியருக்கு சிறிது திறமை இருந்தால் போதும். 

இந்த சூழ்நிலையில் வாழும் ஆசிரியர்கள், பிஎப் உட்பட எந்தவிதமான சலுகை பற்றியும் தெரியாது. எல்லாவற்றிக்கும் காசு கொடுத்தால் போதும், செய்து தர ஆட்கள் இருக்கிறார்கள். இது போன்ற ஆசிரியர்கள் பணம் செலவு செய்ய தயங்கமாட்டார்கள். 

இது போன்ற சூழ்நிலையை தமிழக அரசின் இடமாற்றம் பற்றிய தற்போது வெளியிடப்பட்ட அறிவிப்பு மாற்றிவிட்டது. 
ஒரு பைசா கூட செலவு இல்லாமல், தாங்கள் கேட்கும் இடத்திற்கு சென்று பணியாற்றலாம் என்பதே மிகப் பெரிய சலுகை. 

இதை அனுபவ பூர்வமாக உணர்ந்தவர்களும், தாங்கள் பணியாற்ற வேண்டிய இடத்தை தேர்வு செய்து காந்திருப்பவர்களும், இந்த அறிவிப்பை கேட்டதும், ஸ்டிரைக்கில் இருந்து ஓடி வந்துவிட்டார்கள். இதே போல, வேறு சில விதிமுறைகளை கண்டறிந்து அறிவித்தால், வில்லன் படத்தில், கண்டக்டர் அஜித் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று, கிரண் கல்லுாரி மாணவிகளை அழைத்து வந்து மறியல் செய்வாரே, அதே போல, தற்போது ஜாக்டோ ஜியோ போராட்டமும் முடிவுக்கு வந்து விடும்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP