மாட்சியை தருமா மாட்டுக்கறி விவகாரம்?

மக்கள் நலத்திட்டங்களில் கவனம் செலுத்துவதை விடுத்து, மாட்டுக் கறி சாப்பிடுவதை விவகாரமாக்குவது வீண் வேலை. வீண் விவகாரங்களை ஊதி ஊதி பெரிதாக்கி, மக்கள் மத்தியில் கலவரத்தை உண்டு பண்ணும் செயலை விடுத்து, அனைவரும் 3 வேளையும் சாப்பிடுவதற்கு என்ன வழி என்று சொன்னால் நாட்டிற்கும் நாட்டு மக்களுக்கும் அது உதவி செய்யும்.
 | 

மாட்சியை தருமா மாட்டுக்கறி விவகாரம்?

மாட்சியை தருமா மாட்டுக்கறி விவகாரம்?

தமிழகத்தில் இன உணர்வு குறித்து அதிகம் பேசப்படுகிறது என்றால், திமுக ஆட்சியில் இல்லை என்று அர்த்தம். இந்து உணர்வு கொண்டவர்கள், குறிப்பாக பசு பாதுகாவலர்கள் பலர் களம் இறங்கி இருகிறார்கள் என்றால் பாஜக மத்தியில் ஆட்சி செய்கிறது என்று பொருள். ஆள்பவர்கள் இதற்கு எந்த விதத்திலும் காரணம் இல்லை என்றால் கூட, இந்த சூழ்நிலையை சம்பந்தப்பட்டவர்கள் சாதகமாக பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

காஷ்மீர் தொடங்கி கன்னியாகுமரி வரை பசுவைப் பாதுகாக்க பலர் களம் இறங்குகிறார்கள். அதே போல மாட்டுக்கறி உண்பவர்கள் என்று தங்களை அடையாளப்படுத்தும் சிலர் அதையும் வீதியில் அடையாளப்படுத்துகிறார்கள். விளைவு இருதரப்பினர் இடையே மோதல்.

ஆங்கிலேயேர் ஆட்சி காலத்தில் இந்தியாவின் முதல் சுந்திரப் போராட்டமான சிப்பாய் கலகம் தோன்றியதற்கு பசுவும், பன்றியும் தான் காரணம். இவற்றின் கொழுப்பை துப்பாக்கியில் தடவி கொடுத்ததால் தான் வீரர்கள் அவற்றை பயன்படுத்த மறுத்து போராட்டம் தொடங்கினார்கள். நாயை தின்னும் புலையன் என்ற வரிகள் தமிழகத்தில் பல ஆண்டுகளாக உள்ளது.

அதாவது, ஈசல், மாடு, நாய், பன்றி, நண்டு, நத்தை என்று அனைத்து விதமான உயிரினங்களீையும் சாப்பிட்டுக் கொண்டு தான் இருக்கிறார்கள். ஆனால் சமூகத்தில் இதையாரும் வெளிப்படுத்தி மோதல்களை உருவாக்குவதில்லை.

கடந்த சிலநாட்களுக்கு முன் நாகை மாவட்டத்தை சேர்ந்த முகமது பைசன் என்பவர் மாட்டுக்கறி உடலுக்கு நல்லது என்று சமூக வலைதளத்தில் பகிர அது அடிதடி மோதலாக வெடித்துள்ளது. இதே போல ஒவ்வொருவரும் ஈசல் நல்லது, பன்றிக்கறி நல்லது என, சமூக வலைதளங்களில் வீரம் காட்ட தொடங்கினால் அமைதி என்பதே இருக்காது.

அடிமாடுகளில் ஜெர்சி போன்ற மாடுகளை விட நாட்டு மாடுகள் தான் அதிகம். அதிலும் வயதான மாடுகளை விட கன்றுக்குட்டிகள் தான் அதிகம் கொலை செய்யப்படுகின்றன. கன்றுக்குட்டிகளை கொன்று ஆட்டுக்கறியுடன் கலந்தால் தெரியாது என்று கூறுகிறார்கள். 

ஜல்லிக்கட்டு போட்டியை தடை செய்வதன் மூலம் நாட்டுக்காளை வளர்ப்பை முறியடிக்கலாம். மாட்டு கறி உண்பதை ஊக்குவிப்பதன் மூலம் பசுக்களை அழித்து விடலாம். வேளாண்மை இயந்திர மயமாகிவிட்ட பின்னர் கால்நடைகள் வளர்ப்பு இப்போது மோதலாக மாறிவிட்டது. இந்த சூழ்நிலையில் மாடுகளை அழித்து ஒழிக்கும் வேளைகள் அதிதீவிரமாக பரவி வருகிறது.

மாடு, நாய் ஆகியவற்றை உண்பவர்களிடம் விசாரித்தால் அதற்கும் கூட ஆயிரத்து எட்டு விதிமுறைகள் வைத்திருப்பார்கள். மாட்டுக்கறி தின்னும் சமூகத்தவர்கள் கூட பன்றிக்கறி சாப்பிடமாட்டார்கள். எதை உண்ண வேண்டும் என்பதை சாப்பிடுபவனே முடிவு செய்ய வேண்டும் என்று எம்பி கனிமொழி கூறியதைப் போல, இருதரப்பும் இந்த விஷயங்களை கைவிட வேண்டும். 

திராவிடர் கழகம் மாட்டுக்கறி மேளாவே நடத்தியது என்றால் உணவு முறை எந்தளவுக்கு அரசியல் ஆக்கப்பட்டுள்ளது என்பது எளிதில் விளங்கும்.

அரசியல் சித்தாந்த ரீதியில், தங்களும் எதிர்க்கருத்துடைய, மத்தியில் ஆளும் பா.ஜ., தலைமையிலான ஆட்சியில் நடக்கும் திட்டங்களை கூர்ந்து நோக்கி, அதில் மக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் திட்டங்கள் ஏதாவது இருந்தால், அதை செயல்படுத்த விடாமல் பார்லிமென்ட்டிலும், பொது வெளியிலும் குரல் கொடுக்க வேண்டும். 

அதிகப்படியான எம்பிக்களை வைத்துள்ள பலமான எதிர்க்கட்சி என்பதை உணர்ந்து, அதற்கு ஏற்றார் போல் திமுக பொறுப்புடன் செயல்பட வேண்டும். அப்போது தான், தங்களை நம்பி வாக்களித்த தமிழக மக்களுக்கு அவர்கள் சரியான நன்றிக் கடனை செலுத்துபவர்களாக இருக்க முடியும். 

மக்கள் நலத்திட்டங்களில் கவனம் செலுத்துவதை விடுத்து, மாட்டுக் கறி சாப்பிடுவதை விவகாரமாக்குவது வீண் வேலை. வீண் விவகாரங்களை ஊதி ஊதி பெரிதாக்கி, மக்கள் மத்தியில் கலவரத்தை உண்டு பண்ணும் செயலை விடுத்து, அனைவரும் 3 வேளையும் சாப்பிடுவதற்கு என்ன வழி என்று சொன்னால் நாட்டிற்கும் நாட்டு மக்களுக்கும் அது உதவி செய்யும்.

newstm.in

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP