'முறிந்த பனை'யான டெல்டா விவசாயிகளின் வாழ்வாதாரம் !

மீனவர்கள் மீண்டும் எழுந்து நிற்க கடல் இருந்தது. விவசாயிகள் மீண்டு எழ நாம் அனைவரும் கருணைக்கடலாக கை கொடுக்க வேண்டும். செய்வீர்களா? செய்வீர்களா? நீங்கள் செய்வீர்களா?
 | 

'முறிந்த பனை'யான டெல்டா விவசாயிகளின் வாழ்வாதாரம் !

போராட்டத்தையே வாழ்க்கையாக மாற்றிக் கொண்ட இனம் மீனவர்களும், விவசாயிகளும். மீனவர்கள் உயிரைப் பணயம் வைத்து தொழில் செய்கிறர்கள் என்றால், விவசாயிகள் வாழ்வை பயணம் வைத்து சாகுபடி செய்கிறார்கள்.

கடந்த 2004ம் ஆண்டு டிசம்பர் 26ம் தேதி மீனவர்களின் வாழ்க்கையையே சுருட்டி வீசியது. சென்னை கன்னியாகுமரி, நாகப்பட்டினம், வேளாங்கன்னி, கடலூர் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் மீனவர்களின் தன்னம்பிக்கையை தவிர்த்து அனைத்தையும் சுருட்டி வீசி எறிந்தது, சுனாமி.
'முறிந்த பனை'யான டெல்டா விவசாயிகளின் வாழ்வாதாரம் !
நேற்று இரவு 10 பேருக்கு சம்பளம் கொடுத்தேன் சார், இன்று ஒரு வேளை உணவுக்கு கையேந்தி நிற்க கூச்சமாக இருக்கு என்ற பெயர் தெரியாத மீனவரின் குரல் சொல்லியதை விட சொல்லாமல் சொன்ன சோக கதை அதிகம்.

மீனவ சமுதாயத்திற்கு நம்பிக்கை நட்சத்திரமாக விளங்குவது கடல் மாதா, அல்லது கடல் தாய். அந்த நம்பிக்கைதான் மிக மிக விரைவிலேயே அவர்களை இயல்பு நிலைக்கு திரும்ப வைத்தது.

சுனாமிக்கு சற்றும் குறையாத பாதிப்பை ஏற்படுத்தியது கஜா புயல், இந்த முறை அது விவசாயிகளின் நம்பிக்கையை முறித்துப் போட்டது.

கடந்த நவ. 15ம் தேதி இரவு தொடங்கி 16ம் தேதி அதிகாலைக்குள் டெல்டா மாவட்ட மக்களின் வாழ்க்கையை புரட்டிபோட்டது கஜா புயல். பல ஆண்டுகள் உழைத்து சேமித்த அனைத்தும் ஒரு சில மணிகளிலேயே அழிந்து போனது. டெல்டா விசாயிகள் நடுத்தெருவில் நிற்கிறோம் என்பதன் கண்காணும் உண்மையாகிப் போனார்கள். நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திண்டுக்கல், திருச்சி, சிவகங்கை, கடலுார், கரூர், ராமநாதபுரம், தேனி மாவட்டங்களில் பலத்த சேதம் அடைந்தது.

அரசு அறிவித்தபடி இப்பகுதியில் 231 பசு, எறுமைமாடுகள், 20 காளைமாடுகள், 19 கன்றுகள்ல1181 ஆடுகள், 14,986 கோழிகள் மற்றும் பறவைகள் இறந்தன.
'முறிந்த பனை'யான டெல்டா விவசாயிகளின் வாழ்வாதாரம் !
மேலும் 12 மாவட்டங்களில் 32,706 எக்டேர் நெற்பயிர், 30ஆயிரத்து 100 எக்டேரில் தென்னை மரங்கள், 7,636 எக்டேரில் மக்காச்சோளம். வாழை 4747 எக்டேர் வாழை, 4  ஆயிரம் எக்டேர் காப்பி, பயறு, பருத்தி, முந்திரி, பலா,3253 எக்டேர் முந்திரி, 500 எக்டேர் கரும்பு, 945 எக்டேர்  மா, 2,707 எக்டேர் பரப்பில் காய்கறி பயிர்களும் சேதம் அடைந்தன.

இதில் நெல், மக்காச்சோளம், காய்கறி போன்றவை அதிகபட்சம் 6 மாதத்திற்குள் அடுத்த போகம் சாகுபடி செய்து மீண்டும எழுந்து விடலாம். ஆனால் இதர மரங்கள் சாகுபடி செய்தவர்கள் மீண்டு எழுவதற்கு குறைந்தது 5 ஆண்டுகள் கடக்கும் மேலும் இவற்றை வெட்டி அகற்றவே பல லட்சம் ரூபாய் தேவைப்படும். ஒவ்வொரு குடும்பமும் பல ஆண்டுகள் உழைப்பை இழந்து நம்பிக்கையை மட்டும் வைத்துக் கொண்டு வாழ்கிறார்கள்.

'முறிந்த பனை'யான டெல்டா விவசாயிகளின் வாழ்வாதாரம் !

இதுவரையில் அரசும் சரி தனியாரும் சரி செய்த உதவிகள் அனைத்துமே பாதிக்கப்பட்டவர்களின் கண்ணீரை துடைத்துள்ளது. அனைத்துமே தற்காலிகமான உதவிகள் தான். இன்னும் சில நாட்களில் விவசாயிகள் மீண்டு எழுந்துவிடுவார்கள். அவர்களுக்கு தேவையான மின் இணைப்பு கிடைத்து விட்டால் தற்காலிகமாக இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி விடுவார்கள். அரசு போர்கால அடிப்படையில் அவர்கள் வீடுகளை சரி செய்ய தேவையான நடவடிக்கையை மேற்கொள்ள .வேண்டும் மத்திய அரசு பிரதமரின் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் பணிகளை தொடங்க மாநில அரசைக் கேட்டுக் கொண்டுள்ளது. மேலும் பசுமைவீடுகட்டும் திட்டம் உள்ளிட்ட பல திட்டங்களை தொடங்க மாநில அரசு முன்வரவேண்டும். இதை விரைந்து முடித்தால் வீடு இழந்த மக்களுக்கு வாழ்விடம் கிடைத்துவிடும்.

விவசாயிகளை  நிரந்தரமாக மீட்டு எடுக்க அவர்கள் இழந்த மரங்களை மீண்டும் உருவாக்க கை கொடுப்பது தான். இது ஒரே நாளில் நடக்காது என்றால் கூட அதை நோக்கி முதல்படி வைக்க வேண்டியது அவசியம். அதற்காக தேவையான கன்றுகளை உருவாக்குவது, தேவையா உரங்களை நியமான விலை அல்லது விலையில்லாமல் வழங்குவது, தேவையான சாகுபடி முன்னேற்பாடுகளை செய்து தருவது ஆகியவை அரசின் முன் உள்ள கடமைகள். மேலும் முறிந்து கிடக்கும் மரங்களை மீட்டு எடுப்பதுடன் அவற்றிக்கு  சரியான அல்லது கூடுதல் விலை கிடைக்க செய்வது சம்பந்தப்பட்ட விவசாயிகள் ஒராண்டாவது கவலையில்லாமல் வாழ வழி செய்யும்.
'முறிந்த பனை'யான டெல்டா விவசாயிகளின் வாழ்வாதாரம் !
இந்த நடவடிக்கைகளை அரசு செய்தாலே விவசாயிகளை இழப்பில் இருந்து நிரந்தரமாக மீட்க முடியும். தற்போது மரவியாபாரிகள் அரசு மரங்களை சிண்டிகேட் அமைத்து குறைந்தபட்ச விலைக்கு வாங்குவது போலவே விவசாயிகள் மரங்களையும் வாங்குகிறார்கள். இது கஜா புயலால் ஏற்பட்ட பாதிப்பை விட அதிகமாகத்தான் உள்ளது.

இந்த நிலையை மாற்ற அனைவரும் முன்வர வேண்டும். பசித்தவனுக்கு மீன் கொடுப்பதைக் காட்டிலும் மீன் பிடிக்க கற்றுக் கொடுங்கள் என்ற ஆங்கில பழமொழிக்கு ஏற்ப டெல்டா விவசாயிகளுக்கு உணவு பொட்டலங்களை வழங்குவதைக் காட்டிலும் அவர்கள் வாழ்க்கை மேலும் உயர சாகுபடிக்கு தேவையான வற்றை வழங்க அனைவரும் முன் வர வேண்டும். இதில் ஒரு சுய நலமும் உள்ளது. தற்போது ஏற்பட்ட கஜா புயலின் பாதிப்பு நமக்கு தெரிய பொங்கல் பண்டிகை வந்துவிடும். அப்போது தேங்காய், கரும்பு , வெல்லம் என்று அனைத்து பொருட்களின் விலையும் உயரும் போதுதான் கஜாவின் வேதனையை காண்போம். மீனவர்கள் மீண்டும் எழுந்து நிற்க கடல் இருந்தது. விவசாயிகள் மீண்டு எழ நாம் அனைவரும் கருணைக்கடலாக கை கொடுக்க வேண்டும். செய்வீர்களா? செய்வீர்களா? நீங்கள் செய்வீர்களா?

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP