பயணிகளுக்கு ஓசியில் ஏசி பயணம் : அசத்தும் ஆட்டோக்காரர்!

பயணிகள் சிரமமின்றி பயணிப்பதற்காக வெப்பத்தை தணிக்கும் வகையில் ஆட்டோவில் தென்னங்கீற்றால் மேற்கூரை அமைத்துள்ளார் திருச்சியை சோர்ந்த ஆட்டோ ஓட்டுநர் சைமன்ராஜ்.
 | 

பயணிகளுக்கு ஓசியில் ஏசி பயணம் : அசத்தும் ஆட்டோக்காரர்!

பயணிகள் சிரமமின்றி பயணிப்பதற்காக வெப்பத்தை தணிக்கும் வகையில் ஆட்டோவில் தென்னங்கீற்றால் மேற்கூரை அமைத்துள்ளார் திருச்சியை சோர்ந்த ஆட்டோ ஓட்டுநர் சைமன்ராஜ்.

கோடை காலம் தொடங்கி தற்பொழுது அக்னி நட்சத்திரம் என்னும் கத்திரி வெயில் வாட்டி வதைக்கிறது. தினமும் 100 டிகிரி செல்சியஸ் மேல் வெயில் சுட்டெரித்து வருவதால் பொதுமக்களும், வாகன ஒட்டிகளும் வெப்ப  காற்றினால் பெரும் சிரம்மத்திற்கு ஆளாகி உள்ளனர். இந்நிலையில், ஆட்டோவில் பயணிக்கும் பயணிகள் சிரமமில்லாமல் செல்வதற்காக ஆட்டோவின் மேற்கூரையில் உள்பக்கமாக தென்னங்கீற்றை பொருத்தி உள்ளார் திருச்சி கே.சாத்தனூர் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் சைமன்ராஜ். 

இவரது புதிய முயற்சி, ஆட்டோ பயணிகளிடம் மிகுந்த வரவேற்று பெற்றுள்ளது. ஆட்டோவில் தென்னங்கீற்றை பொருத்தி உள்ளதால், ஆட்டோவின் உள்ளே வெப்ப அனல் இல்லாமல், சற்று குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. 

கடந்த 2 வருடங்களாக ஆட்டோ ஓட்டுநராக பணிபுரி்ந்து கொண்டிருக்கும் நிலையில்,  கோடை காலங்களில் பணிகளின் சிரம்மத்தை போக்கும் வகையில் இந்த புது முயற்சியை கையாண்டு உள்ளார் ஆட்டோ ஓட்டுநர் சைமன். இதற்கு ஆன செலவு 200 ரூபாய் தான். 

ஆட்டோவில் பயணிகள் பயணிப்பதற்கு முன்பாக தண்ணீரை வைத்து ஸ்பீரே மூலம் தென்னங்கீற்றுக்கு அடித்து விடுகிறார். இதனால் சாலையில் செல்லும்போது, வெப்பக் காற்று தென்னங்கீற்றில் உள்ள தண்ணீரால் குளுமையாக மாறி பயணிகளுக்கு நல்ல ஒரு பயணத்தை கொடுப்பதாக ஆட்டோ ஓட்டுநர் சைமன் ராஜ் கூறுகிறார். 

அதுமட்டுமின்றி இயற்கையின் அரவணைப்பு எந்த அளவு முக்கியம் என்பதை மக்கள் உணர வேண்டும் என்றும், மரங்களை நட்டு மக்கள் பயன்பெற வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையிலும் இந்த புதுமுயற்சியை மேற்கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

பயணிகளை கவர்வதற்காக வண்ண ஸ்டிக்கர்கள், ரேடியோ, அலங்கார விளக்குகள், திரைச்சீலைகள் போன்றவற்றை பொருத்தி கொள்வது வழக்கமாக இருந்தாலும், கோடை காலத்தில் இது போன்று புதிய முயற்சி மற்ற ஆட்டோ ஓட்டுநர்களுக்கு ஒரு முன்மாதிரியாக அமைந்துள்ளது என்றால் அது மிகையாகாது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP