1. Home
  2. தமிழ்நாடு

2 நாட்களுக்கு பிளாட்ஃபார்ம் டிக்கெட் விற்பனை இல்லை - தெற்கு ரயில்வே..!

1

தீபாவளி பண்டிகை வருகிற 31ம் தேதி (வியாழக்கிழமை) கொண்டாடப்படுகிறது. தீபாவளியை பொதுமக்கள் புத்தாடை உடுத்தியும், பட்டாசுகள் வெடித்தும், நண்பர்கள்-விருந்தினர்களுக்கு இனிப்புகளை வழங்கியும் கொண்டாடுவது வழக்கம். இந்நிலையில் தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 2 நாள் மட்டுமே எஞ்சியுள்ளது. இருந்தாலும் பொதுமக்கள் தீபாவளி ‘பர்சேஸ்’ செய்வதை ஒரு மாதத்திற்கு முன்னரே தொடங்கினர்.

ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் காலைமுதல் தீபாவளி பொருட்கள் வாங்க மக்கள் படையெடுத்தனர். இதனால், தமிழகம் முழுவதும் பஜார் வீதிகளில் தீபாவளி விற்பனை நேற்று முன்தினம் களைகட்டின. சென்னையை பொறுத்தவரை கடை வீதிகளில் கடந்த ஒரு மாதமாகவே கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

இந்நிலையில் தீபாவளி பண்டிகையை ஒட்டி மக்கள் அதிகளவில் ஊர்களுக்குச் செல்வார்கள் என்பதால் சென்னை சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம், பெரம்பூர் ரயில் நிலையங்களில் அக்.29, 30 ஆகிய 2 நாட்களுக்கு பிளாட்ஃபார்ம் டிக்கெட் விற்கப்படாது என தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது 

Trending News

Latest News

You May Like