நாளை வெளியாகவிருக்கும் 'சூரரைப் போற்று' தீம் பாடல் - இசையமைப்பாளர் அறிவிப்பு

இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார், " 'சூரரைப் போற்று' படத்தில் இடம்பெற்றிருக்கும் 'மாறா தீம்' பாடல் நாளை மாலை 4 மணிக்கு வெளியிடப்படும்" என தெரிவித்துள்ளார். இந்த செய்தி, சூர்யா ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
 | 

நாளை வெளியாகவிருக்கும் 'சூரரைப் போற்று' தீம் பாடல் - இசையமைப்பாளர் அறிவிப்பு

சுதா கொங்கோரா இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் படம் 'சூரரைப் போற்று’. சிக்கியா என்டர்டைன்மென்ட் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். பெண் இயக்குனரின் இயக்கத்தில் சூர்யா நடிப்பது இதுவே முதல்முறை ஆகும். சூர்யா நடித்து சமீபத்தில் வெளியானப் படங்கள் பெரிய வெற்றி பெறாததால், இந்தப் படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.


மேலும், ஜி.வி.பிரகாஷ் குமார் இசையில் தனுஷ் நடித்து வெளியான 'அசுரன்' படத்தின் பாடல்களும் பின்னணி இசையும் மிகப் பெரிய ஹிட் அடித்தது. இந்நிலையில் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார், " 'சூரரைப் போற்று' படத்தில் இடம்பெற்றிருக்கும் 'மாறா தீம்' பாடல் நாளை மாலை 4 மணிக்கு வெளியிடப்படும்" என தெரிவித்துள்ளார். இந்த செய்தி, சூர்யா ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.  

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP