விரைவில் அனைத்து மகளிருக்கும் ஊக்கத்தொகை..! குட் நியூஸ் சொன்ன உதயநிதி..!
விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த 688 ஊராட்சிகளுக்கு 825 எண்ணிக்கையிலான கலைஞர் விளையாட்டு உபகரண தொகுப்புகளையும், விழுப்புரம் மாவட்ட ஊரகப் பகுதிகளைச் சேர்ந்த 257 சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.30.16 கோடி, நகர்ப்புர பகுதிகளைச் சேர்ந்த 38 சுய உதவிக் குழுவிற்கு ரூ.4.18 கோடி, என மொத்தம் 295 சுய உதவிக் குழுவிற்கு ரூ.34.34 கோடிக்கான வங்கி கடன் இணைப்புகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “விளையாட்டுத்துறையின் வளர்ச்சிக்கு மட்டுமல்ல மகளிர் மேம்பாட்டுக்கும், அனைத்து வகையிலும் நம் கழக அரசு துணை நின்று வருகிறது. அந்த வகையில், இன்றைக்கு 300 சுய உதவிக்குழு சகோதரிகளுக்கு வங்கிக் கடன் இணைப்பினை வழங்குகிறோம். இந்த விழுப்புரம் மாவட்டத்தில் மகளிர் சுய உதவிக்குழுக்களைச் சேர்ந்த சகோதரிகள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றீர்கள். மாநிலத்திலேயே விழுப்புரம் மாவட்டம் இரண்டாவது பெற்றுள்ளது இந்த மாவட்ட மகளிரின் உழைப்புக்கு கிடைத்த ஒரு அங்கீகாரம்.
ஒன்றிரண்டு குழுக்களைப் பற்றி இங்கே குறிப்பிட விரும்புகின்றேன். திருவெண்ணை நல்லூர் வட்டாரம், தென்னைவளம் ஊராட்சியில் ஆனந்தம் மகளிர் சுய உதவிக்குழுவினர் கடந்த 7 ஆண்டு காலமாக சிறப்பாக செயல்பட்டு வருகின்றீர்கள். பால் உற்பத்தியில் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக திகழ்ந்து வரும் உங்களுக்கு, இன்றைய தினம் ரூபாய் 20 லட்சம் வங்கிக் கடன் இணைப்பினை வழங்குவதில் அரசு பெருமையடைகின்றது.
அதே போல, காணை வட்டாரம், கல்யாணம்பூண்டி ஊராட்சியில் காமராஜர் மகளிர் சுய உதவிக் குழு கடந்த 10 வருடங்களாக சிறப்பாக செயல்பட்டு வருகின்றது. அக்குழுவின் சகோதரிகள் அழகுக்கலை நிலையத்தை நடத்தி வருகின்றனர். இவர்களுடைய வாழ்வை அடுத்தகட்டத்துக்குச் எடுத்துச் சென்றிட, 18 லட்சம் ரூபாயை இங்கே வங்கிக் கடன் இணைப்பாக வழங்குகின்றோம். இந்தக் கடன் இணைப்புகளை, மகளிர் நீங்கள் சிறப்பாக பயன்படுத்திக் உங்கள் வாழ்க்கையை, குடும்பத்தை பொருளாதாரத்தில் உயர்த்திட வேண்டுமென அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
அதே போல, காணை வட்டாரம், கல்யாணம்பூண்டி ஊராட்சியில் காமராஜர் மகளிர் சுய உதவிக் குழு கடந்த 10 வருடங்களாக சிறப்பாக செயல்பட்டு வருகின்றது. அக்குழுவின் சகோதரிகள் அழகுக்கலை நிலையத்தை நடத்தி வருகின்றனர். இவர்களுடைய வாழ்வை அடுத்தகட்டத்துக்குச் எடுத்துச் சென்றிட, 18 லட்சம் ரூபாயை இங்கே வங்கிக் கடன் இணைப்பாக வழங்குகின்றோம். இந்தக் கடன் இணைப்புகளை, மகளிர் நீங்கள் சிறப்பாக பயன்படுத்திக் உங்கள் வாழ்க்கையை, குடும்பத்தை பொருளாதாரத்தில் உயர்த்திட வேண்டுமென அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
அந்த வழியில் நமது முதலமைச்சர் அவர்கள் மகளிர் முன்னேற்றத்துக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். மகளிரின் பொருளாதார சுதந்திரத்தை உறுதி செய்திட கழக அரசு எண்ணற்றத் திட்டங்களை செயல்படுத்திக் கொண்டிருக்கிறது.
நமது முதலமைச்சர் அவர்கள் பொறுப்பேற்ற முதல்நாள் 5 திட்டங்களுக்கு கையெழுத்திட்டார்கள். அதில் முதல் கையெழுத்து பெண்களுக்கான ‘விடியல் பயணம்’ கட்டணமில்லா பேருந்து வசதி திட்டத்தை நம்முடைய முதலமைச்சர் அவர்கள் செயல்படுத்தினார்கள். இந்த திட்டத்தில் ஒவ்வொரு மகளிரும் மாதம் 900 ரூபாயிலிருந்து 1,000 ரூபாய் வரை சேமிக்கின்றார்கள்.
மகளிர் காலையில் எழுந்து பிள்ளைகளுக்கு சமைத்துக் கொடுக்க சிரமப்படக் கூடாது என்று, இந்தியாவிலேயே முதன்முறையாக முதலமைச்சரின் காலை உணவுத்திட்டத்தை அறிமுகப்படுத்தி, திங்கள் முதல் வெள்ளி வரை 1 ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு படிக்கின்ற 20 லட்சம் குழந்தைகள் காலை உணவுத் திட்டத்தில் பயன்பெற்று வருகிறார்கள்.
அரசுப்பள்ளியில் படித்து கல்லூரியில் உயர் கல்வியில் சேரும் மாணவிகளுக்காக ‘புதுமைப்பெண்’ எனும் திட்டதின் மூலம் மாதம் 1000 ரூபாய் கல்வி ஊக்கத்தொகையை நம்முடைய அரசு வழங்குகின்றது.
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம்
அதேபோல இந்தியாவே திரும்பி பார்க்கும் வகையில் ஒரு திட்டம். கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம். கடந்த ஒரு வருடத்தில் ஒரு கோடியே 16 லட்சம் மகளிர் மாதா, மாதம் 1000 ரூபாயை பெற்று வருகின்றனர்.
இத்திட்டத்தில் விண்ணப்பித்தவர்கள் 1 கோடியே 50 லட்சம் மகளிர்தான். சில பயனாளிகள் விடுபட்டுள்ளார்கள். விரைவில் கண்டிப்பாக தகுதியுள்ள அனைத்து மகளிருக்கும், மாதா, மாதம் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை 1,000 வழங்கப்படும் என்ற உறுதியினை நான் கொடுக்கின்றேன்” என்று தெரிவித்துள்ளார்.