தந்தை கண்முன்னே ஏரியில் மூழ்கிய மகன்.. மாடு குளிப்பாட்டும் போது சோகம்..!!

தந்தை கண்முன்னே ஏரியில் மூழ்கிய மகன்.. மாடு குளிப்பாட்டும் போது சோகம்..!!

தந்தை கண்முன்னே ஏரியில் மூழ்கிய மகன்.. மாடு குளிப்பாட்டும் போது சோகம்..!!
X

அரியலூரில் ஏரிக்குள் மாடு இழுத்துச் சென்றதால் தண்ணீரில் மூழ்கி சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள கார்குடி காலனி தெருவைச் சேர்ந்தவர் சின்னசாமி. இவரது மகன் கேசவன், அதே ஊரில் உள்ள பள்ளியில் 2ஆம் வகுப்பு படித்து வந்தான். 
தற்போது பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால், சிறுவன் கேசவன் தனது தந்தை மாட்டை ஓட்டிச் செல்லும் போது  உடன் சென்றிருக்கிறான்.

அப்போது சின்னசாமி மாட்டை குளிப்பாட்டி கொண்டிருந்துள்ளார். மற்றொரு புறம் மாட்டை பிடித்து கொண்டிருந்தான் சிறுவன். அப்போது திடீரென கேசவனை மாடு ஏரிக்குள் இழுத்துச் சென்றுள்ளது. சிறுவனை மீட்க அவனது தந்தையும் முயற்சித்துள்ளார். 

இருப்பினும் ஆழமான இடத்தில் சேற்றில் சிக்கிய சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார். சிறுவன் இறந்ததால் அவரது தந்தை சின்னசாமி கதறி அழுதார்.

இதுகுறித்து தா.பழூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். தந்தை கண் முன்னே மகன் குளத்தில் மூழ்கி இறந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தில் மூழ்கியது.  

newstm.in 

Next Story
Share it