1. Home
  2. தமிழ்நாடு

தமிழகத்தில் தொடங்கியது சமூகப் பரவல்! வல்லுநர்கள் எச்சரிக்கை!!

தமிழகத்தில் தொடங்கியது சமூகப் பரவல்! வல்லுநர்கள் எச்சரிக்கை!!


தமிழகத்தில் எந்தத் தொடர்பும் இல்லாமல் 60 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதை அடுத்து, சமூகப் பரவல் தொடங்கியிருப்பதாக மருத்துவ வல்லுநர்கள் கூறுகின்றனர்.

நோய் தொற்று ஏற்பட்ட 60 பேரில் பெரும்பாலானோர் சென்னையை சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. அவர்களுக்கு வெளிநாடு சென்று வந்தவர்கள் அல்லது கொரோனா தொற்று ஏற்பட்டவர்களுடன் தொடர்பு இல்லை எனத் தெரிகிறது. ஆனால் இதனை தமிழக சுகாதாரத்துறை மறுத்துள்ளது. சுகாதாரத்துறையினர் ஏற்கனவே பாதிப்பு ஏற்பட்டவர்களிடம் இருந்து இவர்களுக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கும் என்று கூறும் நிலையில், மருத்துவ வல்லுநர்கள் இதனை சமூகப்பரவல் என்று கூறுகின்றனர். 


கடந்த செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தமிழகத்தில் சமூகப் பரவல் இல்லை என்றும்,  ஏற்கனவே பாதிப்பு ஏற்பட்டவர்களிடம் இருந்தே வைரஸ் பரவுவதாக கூறினார். ஆனால் மருத்துவர்கள் பரிசோதனை முறை பலவீனமானது என்று கூறுகின்றனர். அரசு ஊரடங்கை கடுமையாக்குவதில் இருந்தே சமூகப்பரவல் ஏற்பட்டுவிட்டது என்பது தெரியவருகிறது என்று கூறியுள்ள ஓய்வு பெற்ற மருத்துவ அதிகாரி சுந்தரராமன், அரசு தொடர்பில்லாத மக்களையும் பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். 

newstm.in

Trending News

Latest News

You May Like