கணிசமாக குறையும் கொரோனா... 21 மாவட்டங்களில் புதிதாக பாதிப்பில்லை! முழு விவரம்!

கணிசமாக குறையும் கொரோனா... 21 மாவட்டங்களில் புதிதாக பாதிப்பில்லை! முழு விவரம்!

கணிசமாக குறையும் கொரோனா... 21 மாவட்டங்களில் புதிதாக பாதிப்பில்லை! முழு விவரம்!
X

கடந்த நாட்களை ஒப்பிடும் போது தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்துள்ளது. 

ஒரே நாளில் சென்னையில் தான் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. சென்னையில் 373 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் ஒரே நாளில் 27 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் எண்ணிக்கை 400ஆக அதிகரித்துள்ளது. சேலத்தில் 5 பேரும், நாமக்கலில் 4 பேரும், விருதுநகர், திண்டுக்கலில் தலா 3 பேரும், மதுரையில் 2 பேரும் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். செங்கல்பட்டு, தருமபுரி, ராமநாதபுரம், தென்காசி, தஞ்சை, நெல்லை, திருப்பத்தூர், திருப்பூர், திருவாரூர், விழுப்புரம் ஆகிய 10 மாவட்டங்களில் ஒருவருக்கு மட்டுமே பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 


அரியலூர், கோவை, கடலூர், ஈரோடு, கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, காஞ்சிபுரம், கரூர், நாகை, நீலகிரி, பெரம்பலூர், புதுக்கோட்டை, ராணிப்பேட்டை, சிவகங்கை, தேனி, திருவள்ளூர், திருவண்ணாமலை, திருச்சி, தூத்துக்குடி, வேலூர் ஆகிய மாவட்டங்களில் புதிதாக பாதிப்பு ஏற்படவில்லை. 

newstm.in

Next Story
Share it