எஸ்.ஐ.கன்னத்தில் பளார் விட்ட பெண்! வைரலாகும் வீடியோ!

எஸ்.ஐ.கன்னத்தில் பளார் விட்ட பெண்! வைரலாகும் வீடியோ!

எஸ்.ஐ.கன்னத்தில் பளார் விட்ட பெண்! வைரலாகும் வீடியோ!
X

விழுப்புரம், திருவெண்ணெய் நல்லூரில் வசித்து வருபவர் முத்துராமன். இவர் அந்த பகுதியில் வீடு ஒன்றை கட்டிவந்துள்ளார். வீடு கட்டும் பொறுப்பை சுபாஷ் என்பவர் கவனித்து வந்துள்ளார். வீடு கட்டுவது தொடர்பாக முத்துராமனுக்கும், சுபாஷுக்கும் பணத் தகராறு எழுந்துள்ளது. இது குறித்து முத்துராமன் மீது சுபாஷ் திருவெண்ணெய் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இந்த புகார் தொடர்பாக முத்துராமனை விசாரிக்க வந்த எஸ்.ஐ, புகார் குறித்து சரிவர விசாரிக்காமல் முத்துராமனை அடித்துள்ளதாக தெரிகிறது. புகார் குறித்து விசாரிக்க வந்த எஸ்.ஐ., தனது கணவரை எதுவும் விசாரிக்காமல் அடித்ததைக் கண்ட  முத்துராமனின் மனைவி, கோபத்தில் எஸ்.ஐயின் கன்னத்தில் பளாரென அறைந்தார். போலீசாரின் கன்னத்தில் பளாரென இளம்பெண் ஒருவர் அறைந்தது அந்த பகுதியில் பரபரப்பானது. உடனே அங்கிருந்த பொதுமக்கள் அந்தப் பகுதியில் சூழ்ந்துக் கொண்டனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

newstm.in

Next Story
Share it