1. Home
  2. தமிழ்நாடு

“ நயன்தாரா யோக்கியமா “ நடிகை ஸ்ரீ ரெட்டியின் சர்ச்சையான பேச்சு !!

“ நயன்தாரா யோக்கியமா “ நடிகை ஸ்ரீ ரெட்டியின் சர்ச்சையான பேச்சு !!


தயாரிப்பாளர்கள் , இயக்குநர்கள் , நடிகர்கள் மீது பாலியல் புகார் தெரிவித்துப் பிரபலமாவனர் நடிகை ஸ்ரீ ரெட்டி. இவர் தற்போது ஹைதராபாத்திலிருந்து, சென்னை வந்து வீடு வாங்கி செட்டில் ஆகிவிட்டார். இதையடுத்து அடிக்கடி தனது கவர்ச்சி புகைப்படங்கள், மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

அது மட்டுமில்லாமல் சில பிரபலங்களை குறித்து சர்ச்சை கூறிய கருத்துக்களை வெளியிட்டு வருகிறார். சினிமா வாய்ப்புக்காக சில நடிகைகள் தன்னுடைய சுய கெளரவத்தை இழந்து படுக்கையை பகிர்ந்து கொள்கிறார்கள் என்று சில தகவல்கள் வெளியாகி கொண்டிருந்த நிலையில் அதை உண்மை என கூறியவர் ஸ்ரீ ரெட்டி. அந்த வகையில் தமிழ் சினிமாவில் இயக்குனர் முருகதாஸ், ஸ்ரீகாந்த், விஷால் உள்ளிட்ட பலரை பற்றியும் அதிர்ச்சி தகவல்களை பதிவிட்டுள்ளார்.

சமீபத்தில் அவர் புதிதாக யூடுயுப் சேனலை ஆரம்பித்து உள்ளார். இன்னும் வசதியாக ஒரு சர்ச்சையை கிளப்பி விட்டுக் கொண்டே தான் இருக்கிறார். சமூக வலைதளத்தில் புதிதாக ஒரு குண்டை போட்டு உள்ளார். நயன்தாராவை எதிர்த்து உங்களால் ஒரு கேள்வி கூட கேட்க முடிந்ததா ? ஒரு குடும்பத்தையே குலைத்தவர் நயன்தாரா.

ஆனால், அவர் பெரிய நடிகை, லேடி சூப்பர் ஸ்டார் என்று எல்லாம் சொல்லி கொண்டாடுகிறீர்கள். பெரிய நடிகைக்கும் எங்களை மாறி போராடிக் கொண்டிருக்கும் நடிகைகளுக்கும் உள்ள வித்தியாசம் அவ்வளவு தான் என்று கூறினார். இப்படி இவர் கூறிய கருத்து தற்போது சமூக வலைத்தளங்களில் சர்ச்சையை கிளப்பி வருகிறது.

Newstm.in

Trending News

Latest News

You May Like