இன்று தங்கம் வாங்கலாமா..? வேண்டாமா..? இன்றைய நிலவரம் இது தான்..!

கடந்த 28-ந்தேதி, தங்கம் விலை மீண்டும் ரூ.72 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்து, ஒரு சவரன் ரூ.71,520-க்கு விற்கப்பட்டது. 29-ந்தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ரூ.71, 840-க்கு விற்பனை செய்யப்பட்டது.
அட்சய திருதியையொட்டி, அதே விலையில் தங்கம் விற்பனை செய்யப்பட்டது. அன்றைய தினம், பொது மக்கள் தங்கம் வாங்க ஆர்வம் காண்பித்தார்கள்.நேற்று முன் தினம் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,640 அதிரடியாக குறைந்து ஒரு சவரன் ரூ.70,200-க்கு விற்பனையானது. நேற்று (மே 2ஆம் தேதி) தங்கம் விலை கிராமுக்கு ரூ.20 குறைந்து ஒரு கிராம் ரூ.8,755க்கும் சவரனுக்கு ரூ.160 குறைந்து ஒரு சவரன் தங்கம் ரூ.70,040க்கும் விற்பனை செய்யப்பட்டது. கடந்த 2 நாட்கள் தங்கம் விலை குறைந்ததால் நகைப் பிரியர்கள் மகிழ்ச்சியடைந்தனர்
இந்த நிலையில் இன்று தங்கம் விலையில் மாற்றம் எதுவும் இன்றி விற்பனையாகி வருகிறது. அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஒரு சவரன் ரூ.70,040-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை ஒரு கிராம் ரூ.8,755-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி கிராமுக்கு ரூ.1 குறைந்து, ஒரு கிராம்ரூ.108க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,08,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:
03-05-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.70,040
02-05-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.70,040
01-05-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.70,200
30-04-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.71,840
29-04-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.71,840