"வனிதா சரக்கடித்த வீடியோவை வெளியிடட்டுமா"? : மிரட்டும் நடிகர்!

"வனிதா சரக்கடித்த வீடியோவை வெளியிடட்டுமா"? : மிரட்டும் நடிகர்!

வனிதா சரக்கடித்த வீடியோவை வெளியிடட்டுமா? : மிரட்டும் நடிகர்!
X

விஜயகுமாரின் மகள் வனிதாவை சுற்றி எப்போதும் சர்ச்சை சுற்றிக்கொண்டே இருக்கிறது. சமீபத்தில் இவர் பீட்டர் பால் என்ற நபரை மூன்றாவதாக திருமணம் செய்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. 

பீட்டர் பாலின் மனைவி இருவர் மீதும் வழக்கு தொடர்ந்தார். இந்த விஷயத்தில் சூர்யா என்பவர் தலையிட்டு வனிதாவை அசிங்கமாக பேசி வருகிறார். விஜய் டிவி பிரபலம் நாஞ்சில் விஜயன் யூடியூப் சேனலுக்கு சூர்யாவை பேட்டி எடுத்தார். அப்போது வனிதா பற்றிய கேள்விகளுக்கு சூர்யா கொச்சையாக பதிலளித்தார். இதனைப்பார்த்த வனிதா, நாஞ்சில் விஜயன் விபச்சாரம் பண்ணுவதாகவும், சூர்யா கஞ்சா வியாபாரி என்றும் காட்டமாக கருத்து தெரிவித்தார். 


இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் நாஞ்சில் விஜயன் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிக்பாஸ் வீட்டிற்கு செல்வதற்கு முன்னர் கேரவனில் சரக்கடித்து விட்டு போன வீடியோவை வெளியிடட்டுமா என  நாஞ்சில் விஜயன் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். அந்த வீடியோ எப்போது வெளியாகும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

newstm.in

Next Story
Share it