கொரோனா நேரத்தில் துப்பாக்கிச்சூடு..! பெண் காவலர் உள்பட 16 பேர் பலி..

கொரோனா நேரத்தில் துப்பாக்கிச்சூடு..! பெண் காவலர் உள்பட 16 பேர் பலி..

கொரோனா நேரத்தில் துப்பாக்கிச்சூடு..! பெண் காவலர் உள்பட 16 பேர் பலி..
X

கனடாவில் மர்ம நபர் துப்பாக்கியால் சுட்டதில் பெண் போலீசார் உள்பட 16 பேர் கொல்லப்பட்டனர்.

கனடா நாட்டின் நோவா ஸ்காட்டா மாகாணத்தின் என்பீல்ட் பகுதியில் உள்ள ஒரு எரிபொருள் நிரப்பும் நிலையம் அருகே போலீஸ் வாகனம் ஒன்று வேகமாக வந்து நின்றது. அதில் இருந்து காவலர் உடை அணிந்திருந்த நபர் இறங்கியதும், தான் வைத்திருந்த துப்பாக்கியதால் சரமாரிய சுட்டார்.

அந்த மர்மநபர் துப்பாக்கியால் கண்மூடித்தனமாக சுட்டதில் பெண் போலீசார் உள்பட 16 பேர் பலியாகி உள்ளனர். உயிரிழந்த பெண் கான்ஸ்டபிள் ஹெய்தி ஸ்டீவன்சன் (வயது 23) என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

காவலர் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்துவது சக காவலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் பல மணி நேர போராட்டத்திற்கு பின் துப்பாக்கிச்சூடு நடத்திய நபரை சுட்டுத்தள்ளினர்.

பின்னர் விசாரணையில் துப்பாக்கிச்சூடு நடத்தியது காவலர் இல்லை என்பது தெரியவந்தது. காவலர் உடை அணிந்து வந்தது கெப்ரியல் வார்ட்மென் என்பதை கண்டுபிடித்த போலீசார், தாக்குதலுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்துகின்றனர்.  

ஒருபுறம் கொரோனா உலுக்கி வரும் நிலையில் இந்த இந்தத் துப்பாக்கிச் சூடு கனடாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

newstm.in 

Next Story
Share it