அதிர்ச்சி தகவல்… கேரளாவில் ஜிகா வைரஸ் பாதித்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு..!

 | 

கேரளாவில், நேற்று புதிதாக 5 பேருக்கு ஜிகா வைரஸ் நோய் உறுதி செய்யப்பட்டதை அடுத்து, மொத்த பாதிப்பு 42 ஆக அதிகரித்துள்ளது.

கேரளாவில் கோவிட் வைரஸ் பாதிப்பு இன்னும் கட்டுக்குள் வராத நிலையில் புதிதாக ஜிகா வைரஸ் நோயும் வேகமாக பரவி வருகிறது. இதுகுறித்து கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் கூறியுள்ளதாவது; “கேரளாவில், பாறசாலை பகுதியைச் சேர்ந்த கர்ப்பிணி பெண் ஒருவருக்கு முதலில் ஜிகா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. அதன்பின்பு, மேலும் சிலருக்கு நோய் பரவியது.

1

இதையடுத்து, ஜிகா வைரஸ் நோய் அறிகுறி உள்ளவர்களின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. இதில், நேற்று முன்தினம் வரை 37 பேருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு இருப்பது தெரிய வந்தது.

நேற்று, மேலும் 5 பேருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இவர்களையும் சேர்த்து, கேரளாவில் இதுவரை 42 பேர் ஜிகா வைரஸ் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர்” என அவர் தெரிவித்தார்.

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP