அதிர்ச்சி சம்பவம்... தமிழ் ஊடகத்தில் கொரோனாவுக்கு முதல் பலி!
அதிர்ச்சி சம்பவம்... தமிழ் ஊடகத்தில் கொரோனாவுக்கு முதல் பலி!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் அதே வேளையில், சமீப காலமாக உயிரிழப்பும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
இந்நிலையில் தமிழ் ஊடகத்துறையில் முதல் கொரோனா உயிரிழப்பு நிகழ்ந்துள்ளது. கொரோனா தொற்று பாதித்து ராஜீவ்காந்தி மருத்துவமனையில் 15 நாட்களாக சிகிச்சை பெற்றுவந்த ராஜ் தொலைக்காட்சியின் மூத்த ஒளிப்பதிவாளர் வேல்முருகன் உயிரிழந்தார். அவருக்கு 8 வது படிக்கும் ஒரு மகன் உள்ளார். அவரது மனைவி அரசு மருத்துவமனையில் ஒப்பந்த செவிலியராக பணியாற்றி வருகிறார். அவரை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்றும், அவர் குடும்பத்துக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் ஊகடத்தினர் முதல்வர் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சருக்கு கோரிக்கை வைக்கின்றனர்.
அவருக்கு 8 வது படிக்கும் ஒரே மகன் உள்ளார்.
— Vetri Dhaasan (@vetridhaasan) June 27, 2020
அவரது மனைவி அரசு மருத்துவமனையில் ஒப்பந்த செவிலியராக பணியாற்றி வருகிறார்.
அவரை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.
அவர் குடும்பத்துக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.
தயவு செய்து கவனியுங்கள்...@CMOTamilNadu @Vijayabaskarofl @RAKRI1
newstm.in