1. Home
  2. தமிழ்நாடு

சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் அதிர்ச்சி...சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணை..!

Q

தமிழகத்தின் உள்ள தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் ஒன்றாக அண்ணா பல்கலைக்கழகம் விளங்குகிறது. பொறியியல் உள்ளிட்ட பல்வேறு படிப்புகள் இங்குப் பயிற்றுவிக்கப்படுகிறது. தமிழ்நாடு அரசின் உயர் கல்வித் துறையின் கீழ் இயங்கும் அண்ணா பல்கலைக்கழக வளாகம் சென்னை கிண்டியில் அமைந்திருக்கிறது.

இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான மாணவர்கள் பயின்று வருகின்றனர். மேலும் பல்கலைக்கழக வளாகத்திலேயே விடுதியில் உள்ளது. இங்கு ஏராளமான மாணவ மாணவிகள் தங்கி படித்து வருகின்றனர்.
சிலர் வெளியிடங்களில் ஹோட்டல்களிலும், வீடுகளை வாடகைக்கு எடுத்தும் தங்கி வருகின்றனர். அண்ணா பல்கலைக்கழகத்தில் எப்போதும் பாதுகாப்பு நிறைந்திருக்கும். பல்கலைக்கழகத்திற்கு வரும் மாணவர்கள் மற்றும் பிறர் பலத்த சோதனைகளுக்குப் பிறகு அனுமதிக்கப்படுகின்றனர். இந்த நிலையில் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக அதிர்ச்சி தரும் தகவல் வெளியாகி உள்ளது.
அண்ணா பல்கலைக்கழகத்தில் மெக்கானிக்கல் துறையில் மாணவி ஒருவர் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த அந்த மாணவிக்கு 19 வயது என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் கல்லூரி விடுதியில் தங்கி படித்து வரும் அவருக்கும் அதே கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வரும் மாணவருக்கும் பழக்கம் ஏற்பட்டு இருவரும் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் இருவரும் மறைவான இடத்தில் சந்தித்து பேசியதாகக் கூறப்படுகிறது.
அப்போது அங்கு வந்த இரண்டு பேர் காதலனை பலமாகத் தாக்கியதோடு அந்த இளம் பெண்ணை மிரட்டி உடைகளைக் களைந்து வீடியோ எடுத்துப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். மேலும் அதனை வீடியோவாகவும் எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் அச்சமடைந்த அந்தப் பெண் காதலன் மூலம் கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகார் தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் பாரதி ராஜன் தலைமையில் விசாரணை குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. பலத்த பாதுகாப்பு கொண்ட அண்ணா பல்கலைக்கழக வளாகத்திலேயே பாலியல் வன்கொடுமை சம்பவம் நடைபெற்றது பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.
அதே நேரத்தில் கல்லூரி வளாகத்தில் இருக்கும் மாணவர்கள் அல்லது ஊழியர்கள் பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் ஈடுபட்டரார்களா? அல்லது வெளிநபர்கள் ஈடுபட்டார்களா? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இந்தச் சம்பவம் பெறும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் சென்னை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர், மேலும் பல்கலைக் கழகத்தில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தொடர்ந்து சம்பவம் நடந்த நாளன்று பதிவான சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரித்தபோது ஒருவரை பிடித்து விசாரணை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது. மேலும் மற்றொருவர் குறித்தும் காவல்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவத்தில் குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் எனக் கூறியுள்ளனர் சென்னை காவல்துறையினர்.

Trending News

Latest News

You May Like