அதிர்ச்சி தகவல்... சென்னையில் 1,069 கர்ப்பிணிகளுக்கு கொரோனா தொற்று!

அதிர்ச்சி தகவல்... சென்னையில் 1,069 கர்ப்பிணிகளுக்கு கொரோனா தொற்று!

அதிர்ச்சி தகவல்... சென்னையில் 1,069 கர்ப்பிணிகளுக்கு கொரோனா தொற்று!
X

தமிழகத்தில் கர்ப்பிணி பெண்களுக்கு தொடர்ந்து கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வரும் நிலையில், சென்னையில் மட்டும் 1,069 கர்ப்பிணிகளுக்கு நோய் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்புக்கு முதியவர்கள், குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்கள், நாள்பட்ட பிற நோய் பாதிப்பு உள்ளவர்கள் எளிதில் ஆளாகிறார்கள். தமிழகத்தில் 7 ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட முதியவர்களும், 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகளும் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,000-க்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்களும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். 


சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் 150 கர்ப்பிணி பெண்கள் பாதிக்கப்பட்டிருந்தனர். இதில் 126 பேர் தற்போது ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டுள்ளனர். எழும்பூர் அரசு தாய்சேய் மருத்துவமனையில் 285 பேரில் 209 பேர் குணமடைந்துள்ளனர். கஸ்தூரிபா காந்தி அரசு மருத்துவமனையில் பாதிக்கப்பட்ட 248 கரப்பிணிகளில் 209 பேரும், ராயபுரம் ஆர்.எஸ்.ஆர்.எம். அரசு மருத்துவமனையில் பாதிக்கப்பட்ட 386 கர்ப்பிணிகளில் 383 பேரும் குணமடைந்துள்ளனர். கர்ப்பிணிகளுக்கு பிறந்த குழந்தைகளுக்கு தொற்று ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

Next Story
Share it