அதிர்ச்சி !! கொரோனாவிலிருந்து மீண்டவர்களுக்கு , மறுபடியும் கொரோனா பாதிப்பு !! மீண்டும் தனிமை...

அதிர்ச்சி !! கொரோனாவிலிருந்து மீண்டவர்களுக்கு , மறுபடியும் கொரோனா பாதிப்பு !! மீண்டும் தனிமை...

அதிர்ச்சி !! கொரோனாவிலிருந்து மீண்டவர்களுக்கு , மறுபடியும் கொரோனா பாதிப்பு !! மீண்டும் தனிமை...
X

காஷ்மீரில் கொரோனா பாதித்து சிகிச்சையில் இருந்த 15 பேருக்கு பரிசோதனையில் நெகடிவ் வந்ததால் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். அடுத்த சில மணிநேரத்தில் அவர்களது மாதிரிகளை இரண்டாம் கட்ட சோதனைக்கு உட்படுத்தப்பட்டபோது , அதில் 12 பேருக்கு பாசிடிவ் வந்ததால் அதிர்ச்சியடைந்தனர்.

ஜம்மு-காஷ்மீரில் குளிர்பான ஆலை ஒன்றில் பணிபுரிந்த ஒருவருக்கு ஜூலை 1ல் கொரோனா உறுதியான நிலையில் உடன் பணிபுரிந்த 15 தொழிலாளர்களின் மாதிரிகள் சோதனையிடப்பட்டன. இதில் கொரோனா உறுதியானதால் கடந்த 1ம் தேதி 15 தொழிலாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் அவர்கள் அனைவரும் 5ம் தேதி இ.எஸ்.ஐ.சி. மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

17ம் தேதி மீண்டும் அவர்களின் மாதிரிகளை பரிசோதித்ததில் நெகடிவ் என வந்தது. அதே நாளில், அவர்களது மாதிரிகளை சுகாதார அதிகாரிகள், இரண்டாவது சோதனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் , அதற்குள்ளாக மருத்துவமனை நிர்வாகம் அவர்கள் அனைவரையும் டிஸ்சார்ஜ் செய்துள்ளது.

அன்று மாலையில் இரண்டாவது சோதனை முடிவுகள் வரவே, அதில் 15 தொழிலாளர்களில் 12 பேருக்கு பாசிட்டிவ் என வந்ததால் அதிர்ச்சியடைந்தனர். இதனால் அந்த 12 பேரையும் கண்டறிய பணியில் சுகாதாரத்துறை இறங்கியது.

அதற்குள்ளாக அவர்களில் சிலர் வேறு வேறு இடங்களுக்கு சென்றதால், அவர்களை தொடர்பு கொண்டு, எக்ஸ்ரே எடுக்க வேண்டும் எனக்கூறி மருத்துவமனைக்கு அழைத்து, கொரோனா பாசிட்டிவ் செய்தியை கூறியுள்ளனர். அவர்கள் 12 பேரும் தற்போது மருத்துவமனையில் மீண்டும் தனிமைப்படுத்தப்பட்டனர்.

Newstm.in

Next Story
Share it