1. Home
  2. தமிழ்நாடு

அதிர்ச்சி !! மிக தீவிரமாக மனிதர்களை பாதிக்கும் , புதிய வகை வைரஸ்..

அதிர்ச்சி !! மிக தீவிரமாக மனிதர்களை பாதிக்கும் , புதிய வகை வைரஸ்..


கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வரும் சூழலில், சீன மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் பன்றிக் காய்ச்சலை ஏற்படுத்தும் H1N1 வைரசுடன் தொடர்புடைய, புதிய நோய் கிருமியை கண்டுபிடித்துள்ளனர்.

G4 என பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய வகை பன்றிக் காய்ச்சல், மனிதர்களை பாதிக்கும் அனைத்து சாத்தியக் கூறுகளையும் கொண்டுள்ளது. கடந்த 2011ம் ஆண்டு முதல் 2018ம் ஆண்டு வரை, சீன ஆராய்ச்சியாளர்கள் 30 ஆயிரம் பன்றிகளிடம் இருந்து மாதிரிகளை சேகரித்ததாகவும் ,

அதிர்ச்சி !! மிக தீவிரமாக மனிதர்களை பாதிக்கும் , புதிய வகை வைரஸ்..

அதில் 179 பன்றிக் காய்ச்சல் வைரஸ்கள் தனிமைப்படுத்தப்பட்டு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அந்த ஆய்வின் மூலம் தற்போது புதிய வகை வைரஸ் தென்பட்டுள்ளதாகவும் ,

2016ம் ஆண்டு முதலே பன்றிகளிடம் இந்த வைரஸ் இருந்ததும் தெரியவந்துள்ளது. பிற வைரஸ்களை காட்டிலும் இது தீவிரமான அறிகுறிகளை வெளிப்படுத்தும் எனவும் கூறப்படுகிறது. எனினும் விலங்குகளிடம் இருந்தே இது மனிதர்களுக்கு பரவும் என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

Newstm.in

Trending News

Latest News

You May Like