அதிர்ச்சி! நீட் தேர்வுக்கான கட்டணம் உயர்வு!!

 | 

மருத்து மேற்படிப்புகளுக்காக நடத்தப்படும் நீட் நுழைவுத் தேர்வுக்காக கட்டணத்தை உயர்த்தி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

நாடு முழுவதும் மருத்துப் படிப்பிற்கு நீட் தேர்வு கட்டாயம். இதற்கு தமிழ்நாடு உள்ளிட்ட ஒரு சில மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்த போதிலும், மத்திய அரசு நீட் தேர்வை கட்டாயமாக்கியுள்ளது. ஆனாலும் தற்போதும் தமிழக அரசியல் கட்சிகள் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இதனிடையே தமிழக அரசு கொண்டு வந்த 7.5% உள் ஒதுக்கீடு காரணமாக அரசுப்பள்ளி மாணவர்கள் பயன் பெறுகின்றனர். இளநிலை படிப்புகள் மட்டுமல்லாமல் முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கும் நீட் தேர்வு நடத்தப்படுகிறது.

இந்நிலையில் மருத்துவ மேற்படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வுக்கான கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. பட்டியலின பிரிவினருக்கு ஏற்கனவே ரூ.2,750 கட்டணம் வசூலிக்கப்பட்ட நிலையில் தற்போது ரூ.3,835 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

பொது மற்றும் .பி.சி பிரிவினருக்கு ரூ. 3,750 ஆக இருந்த கட்டணம் தற்போது ரூ.5,015 ஆக உயரத்தப்பட்டுள்ளது. அதேபோல் நீட் தேர்வுக்கான ஜிஎஸ்டி வரியாக பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.765 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP