அதிர்ச்சி! செங்கல்பட்டில் அடுத்தடுத்து உயிரிழந்த 11 கொரோனா நோயாளிகள்!!

 | 

ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கொரோனா நோயாளிகள் 11 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.

தமிழகத்தில் கொரோனா பரவல் மிக அதிகமாக உள்ளது. தற்போது நாள் ஒன்றுக்கு 20 ஆயிரம் பேர் பாதிக்கப்படும் நிலையில் வரும் காலங்களில் இந்த எண்ணிக்கை 60 ஆயிரத்தை நெருங்கும் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். எனவே நோய் தடுப்பு விதிகளை முறையாக பின்பற்ற வேண்டும் எச்சரித்துள்ளனர்.

தமிழகத்தை பொறுத்தவரை சென்னைக்கு அடுத்தபடியாக அதிகம் பேர் பாதிக்கப்பட்ட மாவட்டமாக செங்கல்பட்டு உள்ளது. அங்கு நாள் ஒன்றுக்கு 1500க்கும் அதிகமானோர் பாதிக்கப்படுகின்றனர்.

நேற்று மட்டும் செங்கல்பட்டு மாவட்டத்தில் 1608 பேர் தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சுமார் 500க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று இரவு 10 மணிக்கு பிறகு மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டதாகவும், அதனால் நோயாளிகள் 11 பேர் உயிரிழந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.  மேலும் பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஆக்ஸிஜன் பற்றாக்குறை காரணமாகவே உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக இறந்த நோயாளிகளின் உறவினர்கள் குற்றச்சாட்டு உள்ளனர். இச்சம்பவம் குறித்து தகவலறிந்த செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ஜான் லூயிஸ் மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டார்.

அதனைத் தொடர்ந்து பேசிய அவர், மருத்துவமனையில்  தேவையான ஆக்ஸிஜன் கையிருப்பு இருந்ததாகவும், ஆனால் எதிர்பாராத விதமாக நோயாளிகள் இறந்துவிட்டதாக தெரிவித்தார். மேலும் இந்த சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP