சாந்தனு நாயுடுவுக்கு டாடா மோட்டார் நிறுவனத்தில் உயர் பதவி..!

சாந்தனு நாயுடு என்பவர் ரத்தன் டாடாவின் நெருங்கிய நண்பர். இவர் தன்னுடைய வித்தியாசமான அணுகுமுறையால் டாடாவால் ஈர்க்கப்பட்டார். இன்ஜினியரிங் முடித்து விட்டு, இன்டர்னாக டாடா குழுமத்தில் சாந்தனு நாயுடு இணைந்தார். தற்போது அவர் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தில் பொது மேலாளராக பதவி உயர்வு பெற்றார்.
யார் இந்த சாந்தனு நாயுடு?
* 2018ம் ஆண்டில், சாந்தனு நாயுடு ரத்தன் டாடாவின் உதவியாளராகப் பணியாற்றத் தொடங்கினார்
.* டாடா சன்ஸ் நிறுவனத்தில் ஆறு ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றி உள்ளார்.
* இவர் 2014ம் ஆண்டு தான் முதன்முதலில் ரத்தன் டாடாவின் கவனத்தை ஈர்த்தார்.
* ரத்தன் டாடாவுக்கு நாய் உள்ளிட்ட செல்லப்பிராணிகள் மீது அளவு கடந்த பாசம் உண்டு. குறிப்பாக நாய்கள் மீது ரத்தன் டாடா அதிகம் அன்பு கொண்டவர்.
* சாந்தனு நாயுடு நாய்களுக்கு காலர் ஒன்றை வித்தியாசமான முறையில் வடிவமைத்து ரத்தன் டாடா மனதில் இடம் பிடித்தார்.