செம பிளான்! வெறும் ரூ.199க்கு 1,000 ஜிபி டேட்டா!!

 | 

ஜியோவிடம் ரூ.199 க்கு 1,000 ஜிபி டேட்டாவை வழங்கும் ஒரு சூப்பர் பிளான் இருக்கிறது. இதனை அனைவரும் பெற முடியும்.

ஜியோ இந்தியாவில் மிகவும் பிரபலமான ஃபைபர் பிராட்பேண்ட் சேவை வழங்கும் நிறுவனம் என்பது அனைவரும் அறிந்ததே. மற்ற நிறுவனங்களின் திட்டங்களை ஆராய்ந்து அதிலிருந்து மாறுபட்டு ஆபர் வழங்குவேத ஜியோவின் வெற்றிக்கான ரகசியம்.

அந்த வகையில் ஜியோ 1,000 ஜிபி டேட்டாவை வெறும் ரூ.199க்கு வழங்குகிறது. இந்த 1000 ஜிபி டேட்டா பயனர்களுக்கு 7 நாட்களுக்கு கிடைக்கிறது. அதன் வேகம் 100 Mbpsஆக இருக்கும். மொத்தமாக வரியுடன் சேர்த்து  ரூ.234.82 செலுத்த வேண்டும்.

jio

ஒரு பயனர் தனது ஸ்டாண்டர்ட் திட்டத்தின் டேட்டாவை பயன்படுத்திய பிறகு இந்த திட்டத்தை வாங்க முடியும். ஒரு பயனர் ஏற்கனவே வாங்கிய எந்தவொரு பிராட்பேண்ட் திட்டத்தின் மேலும் இது பொருந்தும்.

ஏர்டெல் அல்லது பிஎஸ்என்எல் நிறுவனங்களிடம் தங்கள் பயனர்களுக்கு இத்தகைய திட்டத்தை வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP