ஷகிலாவின் வாழ்க்கை வரலாற்று படம் ஓடிடி தளத்தில் ரிலீஸ் ? - ஊரடங்கில் ரசிகர்கள் உற்சாகம் !

ஷகிலாவின் வாழ்க்கை வரலாற்று படம் ஓடிடி தளத்தில் ரிலீஸ் ? - ஊரடங்கில் ரசிகர்கள் உற்சாகம் !

ஷகிலாவின் வாழ்க்கை வரலாற்று படம் ஓடிடி தளத்தில் ரிலீஸ் ? - ஊரடங்கில் ரசிகர்கள் உற்சாகம் !
X

ஒரு காலத்தில் மலையாள திரையுலகில் பிரபல கதாநாயகர்களின் படங்களுக்கு இணையாக வசூலில் கொடிகட்டிப் பறந்தது ஷகிலாவின் திரைப்படங்கள். 

பின்னர் தமிழ், தெலுங்கு, கன்னடம் திரையுலகிலும் கலக்கிய ஷகிலா தற்போது ஒருசில திரைப்படங்களில் மட்டும் நடித்து வருகிறார். எனினும் அவருக்கு எப்போதும் ஒரு ரசிகர் பட்டாளமே உண்டு.

அந்த வகையில் கவர்ச்சி நடிகை ஷகிலாவின் வாழ்க்கை வரலாற்று படத்தையும் ஓடிடி தளத்தில் வெளியிட படக்குழு முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

கன்னட இயக்குநர் இந்திரஜித் லங்கேஷ் இயக்கத்தில் ‘ஷகீலா நாட் பார்ன் ஸ்டார்’ என்ற டைட்டில் உடன் உருவாகும் இந்தப் படத்தில் பாலிவுட் நடிகை ரிச்சா சதா நடித்துள்ளார்.

அவருடன் தேசியவிருது பெற்ற பாலிவுட் நடிகர் பங்கஜ் திரிபாதியும் நடித்துள்ளார். இவர் ரஜினிகாந்தின் காலா படத்தில் காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

 இந்த நிலையில், கொரோனா ஊரடங்கு காரணமாக மார்ச் 25ஆம் தேதி முதல் திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன. இதனால் ரிலீசுக்கு தயாராகியிருக்கும் படங்களை சில தயாரிப்பாளர்கள் ஓடிடி தளத்திலும் வெளியிட்டு வருகின்றனர். 

அந்த வகையில் நடிகை ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள், கீர்த்தி சுரேஷின் பெண்குயின் உள்ளிட்ட படங்கள் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டன. அடுத்ததாக நடிகை வரலட்சுமியின் டேனி, யோகி பாபு நடித்த காக்டெய்ல் உள்ளிட்ட படங்களும் விரைவில் டிஜிட்டல் தளத்தில் வெளியாக இருக்கின்றன.

இந்நிலையில் கவர்ச்சி நடிகை ஷகிலாவின் வாழ்க்கை வரலாற்று படத்தையும் ஓடிடி தளத்தில் வெளியிட படக்குழு முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

newstm.in 

Next Story
Share it