ஓடும் காரில் பாலியல் தொல்லை... திடீரென வெளியே குதித்த பெண்கள்!! 

 | 

பெண்கள் டாக்சியில் சென்று கொண்டிருந்த போது அவர்களிடம் ஓட்டுநர் அத்துமீறியதை அடுத்து, இரண்டு பெண்கள் ஓடும் காரில் இருந்து குதித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் டாக்சியை வாடகைக்கு எடுத்த மூன்று பெண்கள் அதில் பயணம் செய்து கொண்டிருந்தனர். அப்போது மூன்று பெண்களையும் ஒரு மார்க்கமாக பார்த்த ஓட்டுநர் அருகில் அமர்ந்திருந்த பெண்ணை உரசிய படி டாக்சி ஓட்டியுள்ளார்.

இதனால் அந்த பெண் பயந்து நகர்ந்து உட்கார்ந்தார். ஆனாலும் அந்த ஓட்டுநர் விடாமல் அந்த பெண்ணுக்கு தொல்லை கொடுத்து வந்தார். இதனால் அச்சமடைந்த மற்ற இரண்டு பெண்களும் டாக்ஸியில் இருந்து தப்பிக்க வேண்டும் என யோசித்தனர்.

abuse 1

அதை அறிந்து கொண்ட ஓட்டுநர் டாக்சியின் வேகத்தை அதிகரித்து வேறு பாதையில் செல்லத் தொடங்கினார். இதனால் இரண்டு பெண்களும் ஓடும் வண்டியிலிருந்து குதித்தார்கள். அப்போது சாலையில் இந்த காட்சியை பார்த்து அதிர்ச்சியடைந்த பொது மக்கள் அந்த பெண்களை காப்பாற்றினார்கள்.

மேலும் வண்டிக்குள் ஒரு பெண் சிக்கியிருப்பதை அறிந்த பொதுமக்கள் டாக்சியை விரட்டி அந்த பெண்ணையும் காப்பாற்றினார்கள். இதனையடுத்து டாக்ஸி ஓட்டுநரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP