ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உள்பட 7 பேர் பலி..!!
மும்பையில் உள்ள செம்பூர் பகுதியில் உள்ள கட்டடத்தில் இன்று(அக்.,06) தீ விபத்து ஏற்பட்டது. முதலில் கீழ் தளத்தில் இருந்த கடையில் மின்சார பெட்டியில் தீப்பிடித்து எரிய துவங்கியது. பின்னர் மளமளவென தீ பரவியது.
முதல் தளத்தில் வசித்து வந்த பிரேம் குப்தா, அவரின் மனைவி மஞ்சு பிரேம் குப்தா(30), அனிதா குப்தா(39), குழந்தைகள் நரேந்திர குப்தா(10) மற்றும் பாரிஸ் குப்தா(7) ஆகிய 5 பேரும், இவர்களை தவிர அடையாளம் தெரியாத 2 பேரும் தீயில் கருகி உயிரிழந்தனர்.
தீ விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறை அதிகாரிகள் சிறிதுநேரம் போராடி தீயை அணைத்தனர். விபத்துக்கான காரணம் பற்றி விசாரணை நடந்து வருகிறது