1. Home
  2. தமிழ்நாடு

சாய்பாபா சமாதியடைவதற்கு ஏழு நாட்களுக்கு முன் சீரடியில் ஓர் வியத்தகு சம்பவம்

சாய்பாபா சமாதியடைவதற்கு ஏழு நாட்களுக்கு முன் சீரடியில் ஓர் வியத்தகு சம்பவம்

சாய்பாபா சமாதியடைவதற்கு ஏழு நாட்களுக்கு முன் சீரடியில் ஓர் வியத்தகு சம்பவம் நிகழ்ந்தது. கிராமபுற வண்டி ஒன்று வந்து மசூதிக்கு முன்னால் நின்றது தனது பயங்கர முகம் வண்டியின், பின்புறம் நோக்கித் திரும்பியிருக்க இரும்புச் சங்கிலியால் பிணைக்கப்பட்டுள்ள ஒரு புலி வண்டியில் இருந்தது. அது ஏதோ ஒரு நோயால் அல்லது பயங்கர துன்பத்தால் அவதியுற்றுக் கொண்டிருந்தது. அதனுடைய காவலா்களான மூன்று தர்வேசிகள் அதை ஊரூராக எடுத்துச் சென்று அதை காண்பிப்பதன் மூலம் பொருளீட்டி வந்தனர். அதுவே, அவர்களின் வாழ்வாதாரம்.

அந்த புலி அனுபவித்து கொண்டிருக்கிருக்கும் வேதனையிலிருந்து அதை விடுவிக்க, குணமளிக்க அவர்கள் எடுத்து கொண்ட பல வித சிகிச்சை முறை களும் பலனற்றதாய் விட்டன. அப்போது, சாய்பாபாவின் புகழை பற்றி கேள்விற்று மிருகத்துடன் அவரை பார்க்க வந்தனர். தங்கள் கைகளில் சங்கலியுடன் அதை அவர்கள், கீழிறங்கி , கதவருகில், அதை நிற்கும்படி செய்தனர். அது இயற்கையிலேயே, குரூரமானது. அத்துடன் நோய்வாய்ப்பட்டது. எனவே அது இருப்பு கொள்ளாமல் இருந்தது.

மக்கள் இதை பயத்துடனும், ஆச்சரியத்துடனும், பார்க்க த் தொடங்கினர். தர்வேசிகள் உள்ளே சென்று புலியை பற்றி அனைத்தையும், சாய்பாபாவுக்கு கூறி அவருடைய அனுமதியுடன் அதை அவர் முன்னர் கொணர்ந்தனர். புலி படிகளை நெருங்கியதும் சாய்பாபாவின், ஒளியினால் அதிர்ச்சியுற்றுத் தனது தலையைத் தாழ்த்தியது. சாய்பாபாவும் புலியும் சந்தித்துக் கொண்ட போது அது படியேறி சாய்பாபாவைப் பாசத்துடன் நோக்கியது. தனது வாலியில் உள்ள மயிர்கொத்தை ஆட்டி அதை மூன்று முறை தரையில் அடித்து உணர்ச்சியற்று சாய்ந்து. அது இறந்தது கண்டு தர்வேசிகள் முதலில் பெரும்துன்பமுற்று சோகம் நிரம்பியவர்களாய் இருந்தனர். ஆனால், பக்குவமடைந்த எண்ணத்திற்கு பின் அவர்கள் தங்களின் நிலைக்கு திரும்பினா்.

புலி வியாதியால் பீடிக்கப்பட்டிருந்தால் அது தனது முடிவை நெருங்கி கொண்டிருந்தது என்றும் அது சாய்பாபாவின் பாதாரவிந்தங்களில் அவர்தம் முன்னிலையில் மரணத்தைச் சந்திக்கும் நிலை அடைந்ததென்றும் கருதினார்கள். அது அவர்களின் கடனாளி, கடன் தீர்ந்ததும் விடுதலை அடைந்து தன் முடிவை, சாய்பாபாவின் சரண கமலங்களில் சமர்ப்பித்து. ஏதேனும், ஒரு ஜந்து ஞானிகளின் பாதங்களில் தலை தாழ்த்தித் தன் முடிவைச் சந்தித்தால் அது நற்கதியடைந்தாகி விடுகிறது. அத்ததைய ஜந்துகளை பொருத்தவரை அவைகள் புண்ணியசாலிகளாக இருந்தாலின்றி எங்ஙனம் அத்தகைய மகிழ்ச்சிகரமான முடிவை அடைய முடியும்.

டாக்டர் வி. ராமசுந்தரம்
ஆன்மீக எழுத்தாளர்.

newstm.in

Trending News

Latest News

You May Like