தொடர் சளி, இருமல்.. கொரோனா அச்சத்தில் இளைஞர்கள் விபரீத முடிவு !

தொடர் சளி, இருமல்.. கொரோனா அச்சத்தில் இளைஞர்கள் விபரீத முடிவு !

தொடர் சளி, இருமல்.. கொரோனா அச்சத்தில் இளைஞர்கள் விபரீத முடிவு !
X

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6 லட்சத்தை தாண்டி உயர்ந்து வருகிறது. தமிழகத்தில் இந்த எண்ணிக்கை ஒரு லட்சத்தை நெருங்குகிறது.

இதனால் கொரோனா பாதிப்பில் இருந்து மக்களை காக்கும்  நடவடிக்கையாக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது. மாநிலத்தின் பல மாவட்டங்களில் ஊரடங்கு அமலில் உள்ளது. 

இந்நிலையில், கொரொனா தொற்று அச்சத்தால் ஒரு இளைஞர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம், இருகூர் பகுதியில் உள்ள காமாட்சிபுரத்தில் வசித்து வருபவர் கண்ணன் (21). இவர் ஒரு தனியர் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார்.

இந்நிலையில், சில நாட்களாக அவருக்கு காய்ச்சல், இருமல் இருந்துள்ளது. அதனால் தனக்கு கொரொனா தொற்று வந்துவிட்டதாக நினைத்து தனது நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் அவர் கூறியுள்ளார்.

பின்னர், இன்று காலையில் சரக்கு ரயில் மோதி இளைஞர் ஒருவர் உயிரிழந்துவிட்டதாக தகவல் வெளியானது. அப்போது வீட்டைலிருந்து வெளியே சென்ற கண்ணன் வெகுநேரம் திரும்பாததால் அவரது வீட்டார் தேடி வந்துள்ளனர்.

அங்கு சென்ற பார்த்த அவர்கள் ரயிலில் தற்கொலை செய்தது கண்ணன் என அடையாளம் காணப்பட்டார். இதனால் அவரது குடும்பத்தினர் அப்பகுதியில் கதறி அழுதனர்.

அவரது உடலை மீட்டு இந்த சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர். 

இதேபோல் மதுரையில் ஒரு இளைஞர் சளி, இருமல், காய்ச்சல் இருந்ததால் கொரோனா பாதிப்பு இருக்குமோ என்ற அச்சத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்ட சோகம் நிகழ்ந்தது. 

newstm.in 

Next Story
Share it