சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு ஜூலை 16ம் தேதி செம்ம ட்ரீட்!

சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு ஜூலை 16ம் தேதி செம்ம ட்ரீட்!

சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு ஜூலை 16ம் தேதி செம்ம ட்ரீட்!
X

கடந்த 2019ம் ஆண்டு பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த நடிகர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் தற்போது உருவாகி வரும் இரண்டு படங்கள் தான் அயலான் மற்றும் டாக்டர்.

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் டாக்டர் திரைப்படத்தின் இறுதி அட்டவணை கோவாவில் படமாக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும், இந்த படம் கிறிஸ்துமஸ் 2020 வெளியீட்டை இலக்காகக் கொண்டுள்ளதாகவும் கடந்த மாதம் தகவல்கள் வெளிவந்தன.

இந்நிலையில் இன்று மாலை 7 மணிக்கு இந்த படத்தின் முக்கிய அப்டேட் ஒன்று வெளியாக உள்ளதாக சிவகார்த்திகேயன் அவர்களின் எஸ்.கே. productionsன் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் கூறப்பட்டது.

இந்நிலையில் அந்த அப்டேட் தற்போது வெளிவந்துள்ளது. அதில் டாக்டர் படத்தின் முதல் பாடல் செல்லம்மா வரும் 16ம் தேதி வெளியிடப்படும் என தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக அனிருத், சிவகார்த்திகேயன், நெல்சன் ஆகியோருக்கு இடையே நடக்கும் கான்வெர்சேஷனை காமெடி தொனியில் பிரத்யேக வீடியோ ஒன்றை உருவாக்கி வெளியிட்டுள்ளனர்.

.'செல்லம்மா' என்ற தலைப்பில் உருவாகியுள்ள இந்தப் பாடலின் வரிகளை சிவகார்த்திகேயன் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது 
 

newstm.in

Next Story
Share it