1. Home
  2. தமிழ்நாடு

கல்லூரி மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வுகள் ரத்து... முதல்வர் அதிரடி அறிவிப்பு !

கல்லூரி மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வுகள் ரத்து... முதல்வர் அதிரடி அறிவிப்பு !


கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டதால் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு பின்னர் ரத்து செய்யப்பட்டன.

இதனால் கல்லூரி செமஸ்டர் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை பல்வேறு தரப்பில் இருந்தது. இந்த நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், தமிழ்நாட்டில் உள்ள கலை மற்றும் அறிவியல் பட்டப்படிப்பு பயிலும் மாணாக்கர்கள், பொறியியல் பட்டப்படிப்பு மற்றும் பாலிடெக்னிக் பட்டயப் படிப்பு பயிலும் மாணாக்கர்களுக்கு தற்போதுள்ள சூழ்நிலையில் பருவத் தேர்வு நடத்துவது குறித்து ஆராய உயர்மட்டக் குழு ஒன்று தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்டது.

மேலும், கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தேர்வு நடத்த இயலாத நிலை உள்ளதாக அக்குழு தன்னுடைய பரிந்துரையை தெரிவித்துள்ளது.

கல்லூரி மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வுகள் ரத்து... முதல்வர் அதிரடி அறிவிப்பு !
மாணாக்கர்களின் நலன் கருதி, பல்கலைக்கழக மானியக் குழு (UGC)மற்றும் அகில இந்திய தொழில் நுட்பக் கல்விக் குழு (AICTE) ஆகியவற்றின் வழிகாட்டுதலின்படி, மதிப்பெண்கள் வழங்கி,

  • முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டு கலை மற்றும் அறிவியல் இளங்கலை பட்டப்படிப்பில் பயிலும் மாணாக்கர்களுக்கும் (Bachelor Degree Arts and Scince) மற்றும் பாலிடெக்னிக் பட்டயப் படிப்பு (Polytechnic Diploma) பயிலும் மாணாக்கர்களுக்கும்,
  • முதுகலைப் பட்டப்படிப்பில் முதலாம் ஆண்டு பயிலும் மாணாக்கர்களுக்கும், (Master Degree First Year)
  • இளநிலை பொறியியல் பட்டப்படிப்பில் முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆண்டு பயிலும் மாணாக்கர்களுக்கும் (BE)
  • முதுநிலை பொறியியல் பட்டப்படிப்பில் முதலாம் ஆண்டு பயிலும் மாணாக்கர்களுக்கும், (ME)
  • அதேபோன்று, எம்.சி.ஏ. முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டு பயிலும் மாணாக்கர்களுக்கும்

இந்தப் பருவத்திற்கு மட்டும் தேர்வில் இருந்து விலக்கு அளித்து அடுத்த கல்வி ஆண்டிற்குச் செல்ல அனுமதிக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

newstm.in 

Trending News

Latest News

You May Like