ரகசிய திருமணம் !! தனியாக வீடு !! 3 வது நாள் மனைவி மீது சந்தேகம் !! கணவன் தூக்கிட்டு தற்கொலை..

ரகசிய திருமணம் !! தனியாக வீடு !! 3 வது நாள் மனைவி மீது சந்தேகம் !! கணவன் தூக்கிட்டு தற்கொலை..

ரகசிய திருமணம் !! தனியாக வீடு !! 3 வது நாள் மனைவி மீது சந்தேகம் !! கணவன் தூக்கிட்டு தற்கொலை..
X

வேலூர் அடுத்த கீழ்மொணவூர் அம்மன் நகரை சேர்ந்தவர் அஜய்குமார் ( 30) இவரும் சேண்பாக்கம் பகுதியை சேர்ந்த அர்ச்சனாவும் காதலித்து வந்துள்ளனர். கடந்த மே மாதம் 8 ஆம் தேதி இருவரும் வீட்டில் இருந்து வெளியேறி ரகசிய திருமணம் செய்து கொண்டனர்.

அதனை அடுத்து கீழ்மொணவூர் பகுதியில் ஒரு வாடகை வீடு எடுத்து தங்கி வந்துள்ளனர். இந்த நிலையில் திருமணமான மூன்றாவது நாளே மனைவியின் நடத்தையில் விஜயகுமாருக்கு சந்தேகம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்துள்ளது.மேலும் சமீபத்தில் அர்ச்சனாவுக்கு கர்ப்பப்பை அறுவை சிகிச்சை நடந்துள்ளது. இதையடுத்து அர்ச்சனா தன் தாய் வீட்டில் ஓய்வெடுக்க செல்வதாக கூறி சென்று உள்ளார்.

தனது மனைவியை வீட்டிற்கு வருமாறு அஜய்குமார் சென்று அழைத்துள்ளார். ஆனால் அர்ச்சனா வர மறுத்ததாக தெரிகிறது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அஜய்குமார் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் மேலும் தற்கொலைக்கு முன்பு வீடியோ பதிவு செய்து அவர் தன் உறவினர்கள் வாட்ஸ்அப் மூலம் அதனை அனுப்பியுள்ளார்.

அஜய்குமாரின் வீடியோவை பார்த்து விட்டு பதறிப்போன உறவினர்கள் அவரது வீட்டிற்கு சென்று பார்ப்பதற்குள் அஜய்குமார் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக விரிஞ்சிபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் திருமணம் ஆன இரண்டாவது மாதத்திலே மனைவி தன்னை விட்டு பிரிந்து சென்றார் என்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Newstm.in

Next Story
Share it