1. Home
  2. தமிழ்நாடு

மதுரையில் 5 பைசாவிற்கு பிரியாணி வழங்கிய கடைக்கு சீல்..!!

மதுரையில் 5 பைசாவிற்கு பிரியாணி வழங்கிய கடைக்கு சீல்..!!


தமிழகத்தில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருவது மக்களிடையே நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.அடுத்ததாக 3 ஆவது அலையை எதிர்கொள்ளவும் அரசு தயாராக இருந்து வருகிறது. இதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொள்கிறது. மேலும் பொதுமக்களுக்கு தேவையான அறிவுரைகளையும் அந்தந்த மாவட்ட நிர்வாகம் வழங்கி வருகிறது.இதனிடையே மதுரையில் பிரியாணி கடைக்காரர் விளம்பர நோக்கில் செய்த காரியம் அங்கு கொரோனா பரவும் அபாயம் ஏற்பட்டதால் மக்களும் அதிகாரிகளும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

மதுரை செல்லூர் பகுதியில் புதியதாக திறந்த பிரியாணி கடை ஒன்று கடையை பிரபல படுத்தும் நோக்கோடு 5 பைசாவுக்கு பிரியாணி விற்பனை செய்வதாக கூறி விளம்பரம் செய்யப்பட்டது. இந்த அறிவிப்புகளுடன் மாநகரம் முழுவதும் பல்வேறு இடங்களில் போஸ்டர் ஒட்டினர்.இதையடுத்து 5 பைசாவுக்கு பிரியாணியை வாங்குவதற்காக காலை முதல் நீண்ட வரிசையில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் குவிந்தனர்.பெரும்பாலானோர் முகக் கவசம் அணியவில்லை. இந்த கூட்டத்தினர் சமூக விலகலையும் பின்பற்றவில்லை

இந்நிலையில்,உரிய கொரோனா விதிமுறைகளை பின்பற்றாமல் பொதுமக்களுக்கு பிரியாணி விற்பனை செய்ததால் கடை முன் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த விவகாரத்தில் – மதுரை மாநகராட்சி அதிகாரிகளின் உத்தரவின் பேரில் பிரியாணி கடைக்கு சீல் வைக்கப் பட்டுள்ளது. இந்த உத்தரவு மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Trending News

Latest News

You May Like