நடிகர் சரத்குமாருக்கு வாழ்த்து தெரிவிக்கும் திரை பிரபலங்கள்..!

நடிகர் சரத்குமாருக்கு வாழ்த்து தெரிவிக்கும் திரை பிரபலங்கள்..!

நடிகர் சரத்குமாருக்கு வாழ்த்து தெரிவிக்கும் திரை பிரபலங்கள்..!
X

ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் ஆகியோர் உச்ச நட்சத்திரமாக இருந்த காலகட்டத்தில், தனகென ஒரு பாதை அமைத்து தனித்து தெரிந்தவர் சரத்குமார்.

1986ம் ஆண்டு தெலுங்கில் வெளியான 'Samajamlo Sthree' என்ற படத்தில் மூலம் திரையுலக பயனத்தை தொடங்கிய இவர் . 1989ம் ஆண்டு வெளியான சட்டத்தின் மறுபக்கம் என்ற படத்தின் மூலம் அவர் தமிழ் திரையுலகில் அறியபட்டார். 

ஆனால் கேப்டன் விஜயகாந்த் நடிப்பில் 1990ம் ஆண்டு வெளியான புலன் விசாரணை என்ற படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம்  பெரிய அளவில் பேசப்பட்டார்.  

அன்று தொடங்கி இன்று  வரை தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் நடித்து வருகின்றார். இந்த 2020ம் ஆண்டு இவர் நடிப்பில் வானம் கொட்டட்டும் என்ற படத்தில் நடித்தார். மேலும் பிறந்தால்  அடங்காதே, பாம்பன் போன்ற படங்களில் நடித்து வருகிறார்.

 சரத்குமார் நடிகர் மட்டுமல்லாமல் தனது உடற்கட்டையும் பல ஆண்டுகளாக சிறப்பாக கவனித்து வருகின்றார். 1974ம் ஆண்டு  மிஸ்டர் மெட்ராஸ் பட்டம் பெற்றவர், இன்று  தனது பிறந்தநாளை கொண்டாடும் சரத்குமாருக்கு பிரபல நடிகை குஷ்பூ தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். 

அவருடைய மனைவி ராதிகா சரத்குமாரும் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். பல திரை பிரபலங்களும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்..

Next Story
Share it