புதுச்சேரியில் பள்ளி - கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை.!
வங்க கடலில் உருவான பெஞ்சல் புயல் தமிழ்நாடு, புதுச்சேரி மக்களை படாதபாடு படுத்திவிட்டது. பெஞ்சல் புயல் வலுவிழந்து திடீரென மீண்டும் உருவாகி அது கடக்கப் போகும் திசையும் புரியாத புதிராக பெரும் விளையாட்டை காட்டிக் கொண்டிருந்தது. இந்த பெஞ்சல் புயல் நேற்று புதுச்சேரி அருகே கரையைக் கடந்தது.
பெஞ்சல் புயலால் தமிழ்நாடு, புதுச்சேரியின் பல பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தது. சென்னை உள்ளிட்ட தமிழ்நாட்டின் வடமாவட்டங்களில் கனமழை பெய்தது. புதுச்சேரியில் வரலாறு காணாத வகையில் 48 செமீ மழை கொட்டித் தீர்த்தது. புதுச்சேரியில் கடந்த 2004-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 21 செமீ மழை பெய்திருந்தது. தற்போது அதைவிட 2 மடங்கு அதிகமாக மழை கொட்டியுள்ளது. இதனால் புதுச்சேரியின் பெரும்பாலான இடங்கள் வெள்ளக்காடாக மிதந்து கொண்டிருக்கின்றன.
இந்நிலையில் பல பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. வெள்ள நீரை வெளியேற்றும் பணியில் அரசு தீவிரமாக செயலாற்றி வருகிறது.
அங்குள்ள பள்ளி, கல்லூரிகள், வீடுகளை சுற்றிலும் மழைநீர் தேங்கியுள்ளது. இதையடுத்து மாணவர்கள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு நாளை விடுமுறையை மாநில அரசு அறிவித்துள்ளது.