1. Home
  2. தமிழ்நாடு

செருப்பே போடமாட்டேன்னு சொல்றது கோமாளித்தனத்தின் உச்சக்கட்டம் - எஸ்.வி.சேகர்..!

1

 எஸ்.வி.சேகர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திமுக ஆட்சியை அகற்றும் வரை செருப்பே போடமாட்டேன்னு சொல்றது கோமாளித்தனத்தின் உச்சக்கட்டம். இனி மேல் அண்ணாமலை வாழ்க்கையில் செருப்பே போட முடியாது. அரசியல் தெரியாத கோமாளி அண்ணாமலை.

எஸ்.வி.சேகர்

சட்டம், ஒழுங்கு சரியில்லை என்றால் எதுக்காக சவுக்கால் அடித்துக் கொள்கிறார். இதற்கு பெயர் பைத்தியக்காரத்தனம், கோமாளித்தனம். இவரை தலைவராக தேர்ந்தெடுத்தவர்கள் தான் தங்களை தாங்களே சவுக்கால் அடித்துக் கொள்ள வேண்டும்.

சவுக்கால் அடித்துக் கொள்வது ஒரு தகுதியா? அப்படி பார்த்தால், தமிழக பாஜகவின் சிறந்த தலைவராக ஒரு படத்தில் ஆடிக் கொண்டே சவுக்கால் தன்னை அடித்துக் கொண்ட எம்.எஸ் பாஸ்கரை தான் தலைவராக நியமிக்க வேண்டும்.

அண்ணாமலை போன்ற கோமாளியை தமிழ்நாடு பாஜக தலைவராக நியமித்த டெல்லி தலைவர்கள் தங்களைத் தானே சாட்டையில் அடித்துக் கொண்டாலும் பாஜகவை காப்பாற்ற முடியாது. 

அண்ணாமலை

பாஜகவில் நடக்கக்கூடிய ஒழுக்கக்கேடுக்கு அண்ணாமலை தினமும் சவுக்கால் அடித்துக் கொள்ள வேண்டும். அண்ணாமலை போன்ற கேவலமான, கோமாளித்தனமான தலைவரை தமிழக அரசியல் இதுவரை பார்த்ததில்லை. சவுக்கால் அடித்து அண்ணாமலை விரட்டியடிக்கப்படுவார். இரவே மருத்துவரிடம் கேட்டு மரத்துபோவதற்கு ஆயின்மெண்ட் வாங்கி முதுகில் தேய்த்துக் கொண்டால் யாருக்கு தெரிய போகிறாது?” என விமர்சித்துள்ளார்.

Trending News

Latest News

You May Like